மைதானத்தில் முறைத்து கொண்டோம். ஆனா போட்டி முடிஞ்சி கோலி என்கிட்ட என்ன சொன்னார் தெரியுமா – சூரியகுமார் விளக்கம்

SKY

ஐபிஎல் தொடரின் 48வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 164 ரன்கள் குவிக்க 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி விளையாடியது. இந்த போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற மும்பை அணிக்கு சூர்யகுமார் யாதவ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் விளையாடி மும்பை அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.

அந்த போட்டியின் போது 13 ஆவது ஓவரில் டேல் ஸ்டெயின் வீசிய ஒரு பந்தை கவர் திசையில் சூர்யகுமார் யாதவ் ஓங்கி அடித்தார். அப்பொழுது கவர் திசையில் பீல்டிங் செய்து கொண்டிருந்த கோலி அந்த பந்தை பிடித்து விட்டு சூரியகுமார் யாதவை நோக்கி முறைத்துக்கொண்டே நடந்து வந்தார். மேலும் இதனால் சூரியகுமார் யாதவும் கோலியை பார்த்தபடியே முறைத்துக் கொண்டார் இந்த சம்பவம் அப்போது பெரும் அளவு பேசப்பட்டது.

இந்நிலையில் களத்தில் கடுமையாக முறைத்துக் கொண்டதற்கான விளக்கத்தை தற்போது சூரியகுமார் வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : அந்த போட்டியில் ரன்களை அடித்து வெற்றி பெற்று தர வேண்டும் என்ற அழுத்தத்தில் நான் இருந்தேன். அந்த ஆட்டத்தில் ஜெயித்துவிட்டால் மும்பை அணி முதல் இடத்திற்கு செல்லும் என்பதால் நான் வெற்றிக்கான இலக்கை அடிக்கவேண்டும் என இருந்தேன்.

sky 2

மேலும் விராட் கோலியுடன் ஏற்பட்ட அந்த மோதல் சம்பவம் இரு தரப்பிலும் இயல்பாக நடைபெற்ற. நீண்ட நாட்களாக சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் கோலியை நான் ஒரு பெரிய ஊக்கமாக கருதுகிறேன். அவருடைய உற்சாகம், கோபம் என அனைத்தும் மைதானத்தில் வெளிப்படும். அது எந்த வகையான கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி அதனாலேயே அவர் என்னை பார்த்தபடி முறைத்தார் நானும் பதிலுக்கு முறைத்தேன்.

- Advertisement -

sky 1

ஆனால் போட்டி முடிந்த பிறகு இந்த சம்பவத்தை குறிப்பிட்டு நாங்கள் இருவரும் சிரித்துக் கொண்டோம். மேலும் கோலி இந்த ஆட்டத்தில் நான் நன்றாக விளையாடியதாக கூறி என்னை வாழ்த்தி என் தோள் மீது கைபோட்டு சென்றார் என்று சூரியகுமார் யாதவ் அந்த சம்பவம் குறித்து விளக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.