கோலி என்னை ஸ்லெட்ஜிங் செய்த போது நான் சந்தோஷப்பட்டேன். காரணம் இதுதான் – மனம்திறந்த சூரியகுமார்

Sky
- Advertisement -

கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல் தொடர் நடைபெற்றது. இந்த தொடரின் போது அசைக்க முடியாத ஒரு அணியாக வலம் வந்த மும்பை அணி இறுதியில் கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் இந்த தொடரின் போது ஒரு போட்டியில் மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் மோதிய ஆட்டத்தில் கோலி மற்றும் சூரியகுமார் யாதவிற்கும் இடையே நடந்த மோதல் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

SKY

- Advertisement -

165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கினை எதிர்த்து விளையாடிய மும்பை அணியின் வீரர்கள் டிகாக் 18 ரன்களிலும், இஷான் கிஷன் 25 ரன்களிலும் ஆட்டம் இருந்து வெளியேற, அடுத்து வந்த திவாரி 5 ரன்களிலும் ஆட்டம் இழந்தார். அப்போது சூர்யகுமார் யாதவ் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மும்பை அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சூர்யகுமார் யாதவ் 43 பந்துகளில் 10 பவுண்டரி 3 சிக்ஸர்கள் என 79 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி தேடிக் கொடுத்தார். இந்த போட்டியின்போது சிறப்பாக விளையாடி இருந்த சூர்யகுமார் யாதவை நோக்கி விராட்கோலி சீண்டும் விதமாக கோபமாக பேசிய சில வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அப்போது இணையத்தில் வெளியாகின.

sky 2

இந்நிலையில் அந்த சீண்டல் குறித்து தற்போது பேசியுள்ள சூர்யகுமார் யாதவ் கூறுகையில் : நான் என்று இல்லை எந்த பேட்ஸ்மேனாக இருந்தாலும் கோலி அவ்வாறு தான் செய்து இருப்பார். மிகவும் ஆக்ரோஷமான அவர் என்னை சீண்டியதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் ஏனென்றால் என்னுடைய விக்கெட் தான் அப்போது பெங்களூர் அணிக்கு முக்கியமாக இருந்திருக்கிறது. அதனால்தான் கோலி என்னை சீண்ட நினைத்து இருக்கிறார் என்று கூறியுள்ளார்.

sky 1

மேலும் நான் எப்போதும் மைதானத்தில் உணர்ச்சிகளை வெளிக்காட்ட மாட்டேன். அன்றைய போட்டியிலும் கோபம் அடைந்தாலும் நான் நிதானமாக விளையாடி வெற்றிக்கு அழைத்துச் சென்றேன். ஆனால் போட்டி முடிந்த பின்பு கோலி என்னிடம் வந்து சிறப்பாக விளையாடியதாக பாராட்டும் தெரிவித்தார். ஆட்டத்தின் போது இதுபோல சீண்டல் சம்பவங்கள் சகஜம் தான் என சூர்யகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement