சென்னை சேப்பாக்கம் கிரவுன்டுல நான் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன் – ஓப்பனாக பதிலளித்த சூரியகுமார்

Suryakumar YAdav.jpeg
- Advertisement -

இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரராக விளங்கி வரும் சூரியகுமார் யாதவ் கடந்த ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இருந்தாலும் தற்போது அணியிலிருந்து நீக்க முடியாத ஒரு மாபெரும் சக்தியாக இந்திய அணிக்கு மாறியுள்ளார். அதிரடியில் பட்டையை கிளப்பும் சூரியகுமார் யாதவ் தற்போது இந்திய அணியின் நான்காவது இடத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டுள்ள வேளையில் இணையதளத்தில் அவர் அளித்துள்ள ஒரு ருசிகரமான பேட்டி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றுள்ளது. அந்த வகையில் அந்த பேட்டியில் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை சூரியகுமார் யாதவ் அளித்துள்ளார். அது குறித்த தொகுப்பை தான் நாம் இந்த பதிவில் காண உள்ளோம். அதன்படி :

sky

- Advertisement -

கேள்வி : டி 20 ஓவர் கிரிக்கெட்டில் உங்களது சிறப்பான இன்னிங்ஸ் எது? பதில் : கடந்த ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக நான் விளையாடிய முதல் போட்டியிலேயே 31 பந்துகளை சந்தித்து 57 ரன்கள் அடித்தேன். அந்த போட்டியில் இந்திய அணி வெற்றியும் பெற்றது. என்னை பொறுத்தவரை அதுவே என்னுடைய சிறப்பான இன்னிங்ஸ் என்று நினைக்கிறேன்.

கேள்வி : மற்ற பேட்ஸ்மேன்கள் ஆடுவதில் இருந்து நீங்கள் ஒரு ஷாட்டை விரும்பி எடுத்துக் கொள்வதாக இருந்தால் அது எந்த ஷார்ட்? அது யாருடையது? பதில் : ரோகித் சர்மா அடிக்கும் ஃபுல் ஷாட். கேள்வி : உங்களுக்கு தனிப்பட்ட வகையில் பிடித்த ஷாட் எது? பதில் : முட்டி போட்டு அடிக்கும் ஸ்வீப் வகை ஷாட் தான்.

sky 2

கேள்வி : கடந்த கால பந்துவீச்சாளர்களில் ஒருவரின் பந்து வீச்சை நீங்கள் எதிர்கொள்ள விரும்பினால் அது யாருடைய பந்தாக இருக்கும்? பதில் : பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் தான். கேள்வி : உங்களுக்கு அதிகமாக மெசேஜ் அனுப்பும் கிரிக்கெட் வீரர்கள் யார்? பதில் : இஷான் கிஷன் மற்றும் ரிஷப் பண்ட்.

- Advertisement -

கேள்வி : உங்களுக்கும், விராட் கோலி மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகியோருக்கும் இடையே 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் வைத்தால் யார் வெற்றி பெறுவார்கள்? பதில் : கண்டிப்பாக விராட் கோலி தான். கேள்வி : நீங்கள் இதுவரை விளையாடிய மைதானத்திலேயே சிக்சர் அடிக்க மிகவும் கஷ்டமாக இருந்த மைதானம் எது? பதில் : சென்னை சேப்பாக்கம் மைதானம் தான் நான் சிக்ஸ் அடிக்க மிகவும் கஷ்டப்படும் மைதானம் என்று சூரியகுமார் யாதவ் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.

இதையும் படிங்க : நல்லா விளையாடினாலும் சஞ்சு சாம்சனை இந்திய அணி டிராப் பண்ண இதுதான் காரணம் – வாசிம் ஜாபர் கருத்து

32 வயதாகும் சூரியகுமார் யாதவ் இந்திய அணிக்காக கடந்த ஆண்டு அறிமுகமாகி இதுவரை 14 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 31.3 சாராசரியுடன் 344 ரன்களை குவித்துள்ளார். அதேபோன்று 42 டி20 போட்டிகளில் விளையாடி 44 சராசரியுடன் 1408 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement