இனிமே நான் வெறும் பேட்ஸ்மேன் மட்டும் இல்ல. புதிய அவதாரம் எடுக்கும் சூர்யகுமார் யாதவ் – நேரலையில் வெளியான தகவல்

SKY-1
- Advertisement -

கடந்த பல ஐபிஎல் தொடர்களாகவே தொடர்ச்சியாக தன்னுடைய நிலையான பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி வந்த மும்பை இந்தியன்ஸ் அணி வீரரான சூர்ய குமார் யாதவிற்கு, இந்த ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அந்த தொடரில் இரண்டு போட்டிகளில் பேட்டிங் விளையாடிய அவர், அந்த இரண்டு போட்டிகளிலும் அற்புதமாக விளையாடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இதற்கிடையில் தற்போது மும்பை இந்தியன்ஸ் டிவிட்டர் பக்கத்தில் நேரலையில் பேட்டி கொடுத்திருக்கும் அவர் தன்னுடைய பந்து வீச்சு திறனைப் பற்றி பேசி இருக்கிறார்.

sky 2

- Advertisement -

அந்த பேட்டியில் இந்திய அணியின் முன்னாள் வீரரான பார்த்திவ் பட்டேல், சூர்யகுமார் யாதவின் பந்து வீசும் திறனைப் பற்றிய கேள்வி கேட்டிருந்தார். அந்த கேள்விக்கு பதிலளித்த அவர், நான் பந்து வீசுவதை ஒருபோதும் நிறுத்தவில்லை. இப்போதும் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் வலைப் பயற்சியின்போதும் பந்து வீசி கொண்டுதான் இருக்கிறேன். எனக்கு பந்து வீச வாய்ப்பு கிடைத்தால் அந்த போட்டியில் நிச்சயமாக நான் பந்து வீசுவேன்.

எனவே நான் பந்து வீசுவதை விரைவில் நீங்கள் பார்ப்பீர்கள் என்று அந்த நேரலையில் பார்திவ் பட்டேலின் கேள்விக்கு பதிலளித்துள்ளார் அவர். ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான சூர்ய்குமார் யாதவ், தனது கிரிக்கெட் வாழ்க்கையை ஒரு ஆல்ரவுண்டராகத்தான் தொடங்கினார்.

Sky 2

பேட்டிங் மற்றும் மிதவேகப் பந்து வீச்சாளராக இருந்த அவர், இதுவரை உள்ளூர் போட்டிகளில் 36 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். அதிலும் 24 விக்கெட்டுகளை முதல் தர போட்டிகளில் கைப்பற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 2014ஆம் ஆண்டு அவரின் பந்து வீசும் முறையின் மீது சந்தேகம் எழுப்பப்பட்டதால் அதிலிருந்து அவர் உள்ளூர் போட்டிகளிலும் பந்து வீசுவதை நிறுத்திவிட்டார்.

sky

சூர்யகுமார் யதவ் ஐபிஎல் தொடர்களிலும் பந்து வீசி இருக்கிறார். 2014ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்காக விளையாடிய சூர்யகுமார் யாதவ், அந்த தொடரில் ஒரு ஓவர் பந்து வீசி 8 ரன்களை விட்டுக்கொடுத்திருக்கிறார். அந்த தொடரில் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்றது.

Advertisement