முன்னெல்லாம் தோத்தா பயப்படுவேன். ஆனா இப்போ இல்ல. என்னோட இலக்கு இதுதான் – சூரியகுமார் வெளிப்படை

sky
- Advertisement -

மும்பை அணியின் நம்பிக்கை நட்சத்திரமான சூர்யகுமார் யாதவ் கடந்த 2 – 3 ஆண்டுகளாக மும்பை அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிரடியாக ரன்களை குவித்து வருகிறார். கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற தொடரிலும் மும்பை அணிக்காக பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் சமீபத்தில் இந்திய டி20 அணியில் அறிமுகமாகிய அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் அவரது ஆட்டத்தில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது. தற்போது வரை அவரால் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை. இந்திய அணியில் அதிரடியாக விளையாடி சிறப்பாக ரன் குவித்த அவரால் தற்போது ஐபிஎல் தொடரில் எதிர்பார்த்த அளவிற்கு விளையாட முடியவில்லை.

இதனால் சூர்யகுமார் யாதவ் சற்று சிரமத்தில் இருப்பதாக தெரிகிறது. ஆனால் தன்னுடைய இந்த நிலை குறித்து பேசியுள்ள அவர் : நான் இப்போது எனக்கு வழங்கப்பட்டிருக்கும் வாய்ப்பை சந்தோஷமாக எடுத்து விளையாடி வருகிறேன். கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் எனக்கு சாதகமாக்கி பெரிய அளவில் ரன்களை குவிக்க முயன்று வருகிறேன். முன்பெல்லாம் சிறப்பாக விளையாடவில்லை என்றால் எனக்கு ஒரு பயம் தோன்றும்.

sky 1

அதேபோன்று அணி தோற்றுவிட்டால் எனக்கு மிகுந்த பயம் ஏற்படும். ஆனால் இப்போதெல்லாம் அந்த பயத்தை நான் விட்டு விட்டேன். அந்த பயமும் என்னை கடந்து போய்விட்டது. நான் இப்போது வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு வந்துள்ளேன். இப்போதைக்கு என்னுடைய இலக்கு அடுத்த 2 – 3 வருடங்களுக்கு என்னுடைய ஆட்டத்தை மேம்படுத்த வேண்டும். அது மட்டுமே என்னுடைய இலக்காகவும், எண்ணமாகும் வைத்து விளையாடி வருகிறேன்.

sky 2

என்னுடைய ஒவ்வொரு போட்டியையும் நான் ரசித்து விளையாடி வருகிறேன். அதனால் ஆட்டம் இழந்தாலும் இப்போதெல்லாம் கவலைப்படுவதில்லை. அவுட் ஆகும்போது நான் என்ன தவறு செய்தேன் என்பதை மட்டுமே ஆலோசித்து அதற்கு ஏற்றாற்போல் வலைப்பயிற்சி மேற்கொண்டு வருகிறேன் என சூரியகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement