
இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இன்னும் சில தினங்களில் ஐசிசி-யின் பத்தாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக தற்போது பயிற்சி போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாடும் இந்த தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று கோப்பையை வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.
இவ்வேளையில் இந்த தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் பயிற்சி போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. அந்த வகையில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணியானது இன்று மும்பை டி.ஒய் பாட்டில் மைதானத்தில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் விளையாட இருக்கிறது.
இந்நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் சற்று முன்னர் போடப்பட்ட வேளையில் அதில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் தாங்கள் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணியானது முதலில் விளையாடி வருகிறது.
இந்நிலையில் இந்த போட்டிக்கான டாஸிற்கு பிறகு பேசிய சூர்யகுமார் யாதவ் கூறுகையில் : இந்த போட்டியில் நாங்கள் முதலில் பேட்டிங் செய்வது நல்ல முடிவு தான். ஏனெனில் டியூ வரும்போது நாங்கள் எவ்வாறு பந்துவீச போகிறோம் என்பது இன்று தெரியவரும். அதோடு இந்த சவாலான சூழலை பந்துவீச்சாளர்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதை பார்க்க ஆவலாக உள்ளேன்.
இதையும் படிங்க : இந்த விடயத்தில் இந்தியா கொஞ்சம் உஷாரா இருக்கனும்.. டி20 உ.கோ முன்னர் எச்சரித்த – எம்.எஸ் தோனி
நிச்சயம் இந்த போட்டியில் இஷான் கிஷன் மற்றும் அபிஷேக் சர்மா தான் துவக்க வீரர்களாக களம் இறங்குவார்கள் என்றும் சூரியகுமார் யாதவ் உறுதி செய்துள்ளார். இதன் காரணமாக எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடருக்கான அணியிலும் அவர்களே துவக்க வீரர்களாக களமிறங்க வாய்ப்புள்ளது. எனவே சஞ்சு சாம்சனின் இடம் பறிபோகும் என்பது குறிப்பிடத்தக்கது.