இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் 2026 ஆம் ஆண்டிற்கான ஐசிசி-யின் பத்தாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெறவுள்ளது. எதிர்வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி துவங்கும் இந்த தொடரானது மார்ச் 8-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த தொடரானது தற்போதே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியை எச்சரித்த : எம்.எஸ் தோனி
இந்தத் தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி நடப்பு சாம்பியனாக பங்கேற்க இருப்பதால் இந்த தொடரில் இந்திய அணியே கோப்பையை கைப்பற்றும் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து கொள்கின்றனர். அதேபோன்று முன்னாள் வீரர்கள் பலரும் இந்திய அணிக்கு சில அறிவுரைகளையும் வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனியும் சில அறிவுரைகளை வழங்கி உள்ளார். அந்த வகையில் மகேந்திர சிங் தோனி கூறியதாவது : இந்த டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க இருக்கும் இந்திய அணி மிக பலம் வாய்ந்த அணியாகவே இருக்கிறது. அதேபோன்று அனைத்து துறைகளிலும் வீரர்கள் சிறந்து விளங்குவதால் நிச்சயம் இந்திய அணியிடம் கோப்பையை வெல்லும் தகுதி இருக்கிறது என்று நினைக்கிறேன்.
இருந்தாலும் நாம் ஒரு விடயத்தில் உஷாராக இருக்க வேண்டும். இந்திய அணி என்னதான் வலுவாக இருந்தாலும் மைதானத்தின் சூழல் மற்றும் பனிப்பொழிவு சற்று பின்னடைவை ஏற்படுத்தலாம். ஏனெனில் பனிப்பொழிவு இருக்கும்போது ஆட்டத்தின் போக்கு சில மணி நேரங்களிலேயே முற்றிலுமாக மாறிவிடும்.
இதையும் படிங்க : 2027 ஒருநாள் உலககோப்பை தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி விளையாடுவார்களா? – தோனி பதில்
அந்த நேரத்தில் டாஸ் வெல்வது மிக முக்கியமான முடிவாகவும் அமையும். சில நேரங்களில் டாஸ் கூட போட்டியின் முடிவை மாற்றலாம். எனவே மைதானத்தில் பனிப்பொழிவு இருக்கும் பட்சத்தில் அதை சமாளித்து விளையாட வேண்டியது அவசியம் என மகேந்திர சிங் தோனி கூறியது குறிப்பிடத்தக்கது.



