இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 2 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்த தொடரில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் இந்த தொடரில் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் முன்னிலையும் வகித்துள்ளது.
திலக் வர்மாவை பாராட்டிய சூரியகுமார் யாதவ் :
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் 166 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி பெரிய தடுமாற்றத்திற்கு இடையே கடைசி ஓவரில் தான் வெற்றி பெற்று இருந்தது.
இந்த போட்டியின் விளையாடிய இந்திய அணியின் முன்னணி வீரர்கள் பலரும் தடுமாற்றத்துடன் விளையாடி ஆட்டம் இழந்தாலும் இறுதிவரை பொறுப்புடன் விளையாடிய திலக் வர்மா 55 பந்துகளை சந்தித்து நான்கு பவுண்டரி, 5 சித்தர்கள் என 72 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமுழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார் .
அவரது இந்த சிறப்பான ஆட்டத்தை பாராட்டி பேசியுள்ள இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில் : 160 ரன்கள் என்கிற இலக்கு எங்களுக்கு நல்ல இலக்காகத்தான் தெரிந்தது. ஆனாலும் இங்கிலாந்து பவுலர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசி ஆட்டத்திற்குள் வந்தார்கள். கடைசி வரை இந்த போட்டி பரபரப்பாக சென்றது.
கடந்த சில தொடர்களாகவே நாங்கள் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை வைத்து விளையாடி வருகிறோம். அந்த கூடுதல் பேட்சனால் ஒரு சில ஓவர்கள் வீசும் வகையில் பார்த்துக் கொள்கிறோம். இந்த போட்டியில் ஆக்ரோஷமான ஆட்டத்தை பார்ப்பதற்கு நன்றாகத்தான் இருந்தது. ஆனாலும் பொறுப்பை கையில் எடுத்து விளையாட வேண்டும்.
இதையும் படிங்க : சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4 ஆவது வீரராக அசத்தல் சாதனையை நிகழ்த்திய ஜாஸ் பட்லர் – விவரம் இதோ
மேலும் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் சிறிய சிறிய பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றிக்கு உதவ வேண்டும். அந்த வகையில் திலக் வர்மா மிகச்சிறப்பாக விளையாடி பொறுப்புடன் ஆட்டத்தை முடித்துக் கொடுத்தார். அவரது இந்த ஆட்டத்தை பார்த்து மற்ற வீரர்களும் அணிக்கு எவ்வாறு பங்களிக்க வேண்டும் என்பதை கற்றுக் கொள்ள வேண்டும் என அவரை பாராட்டி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.



