ஐ.பி.எல் தொடரில் சிறந்த பிளேயிங் லெவனை தேர்வு செய்த சூரியகுமார் யாதவ் – கேப்டன் யார் தெரியுமா ?

SKY

இந்தியாவில் இந்த ஆண்டு நடத்தி ஒத்திவைக்கப்பட்ட 14 ஆவது ஐபிஎல் தொடரானது மீண்டும் செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மீண்டும் ஐபிஎல் துவங்க இருப்பதால் ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் மும்பை அணியின் முன்னணி இளம் அதிரடி வீரரான சூர்யகுமார் யாதவ் ஐபிஎல் போட்டியின் சிறந்த பிளேயிங் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

IPL

இந்த அணியில் துவக்க வீரர்களாக மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரரான ஜாஸ் பட்லர் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். இருவருமே அதிரடியான துவக்கத்தை கொடுப்பவர்கள் மட்டுமின்றி பெரிய ஸ்கோர்களை குவிக்க கூடியவர்கள் என்பதனால் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அதனை தொடர்ந்து மிடில் ஆர்டரில் கோலி, டிவில்லியர்ஸ் ஆகியோருடன் சேர்த்து தனது பெயரையும் அவர் இணைத்துள்ளார். மூன்றாவது வீரராக கோலியும், நான்காவது வீரராக டிவில்லியர்ஸ், ஐந்தாவது இடத்தில் சூர்யகுமார் யாதவ் இடம்பெற்றிருக்கின்றனர். இதில் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மகேந்திர சிங் தோனிக்கு அவர் அணியில் இணைக்கவில்லை. அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பராக பட்லர் செயல்படுவார்.

Kohli-ABD

ஆல்ரவுண்டர் வரிசையில் பாண்டியா, ரசல் மற்றும் ஜடேஜா ஆகியோரை இணைத்துள்ளார். மேலும் பந்துவீச்சாளர்ளாக ஆப்கானிஸ்தான் அணியை சேர்ந்த ரஷித் கான் மற்றும் இந்திய வேகப்பந்து வீச்சாளரான பும்ரா மற்றும் ஷமி ஆகியோரை தேர்வு செய்துள்ளார். இவர் தேர்வு செய்துள்ள இந்த அணியில் தோனியை தவிர மற்ற பலமான வீரர்களின் பெயர் இடம் பெற்றுள்ளது. இந்த அணி தான் சிறந்த ஐபிஎல் லெவன் அணியாக சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த அணி இதோ :

- Advertisement -

Buttler-3

1) ரோஹித் சர்மா, 2) ஜாஸ் பட்லர், 3) விராட் கோலி, 4) ஏ.பி.டி, 5) சூரியகுமார் யாதவ், 6) ஹார்டிக் பாண்டியா, 7) ஆண்ட்ரே ரசல், 8) ரவீந்திர ஜடேஜா, 9) ரஷீத் கான், 10) பும்ரா, 11) முகமது ஷமி

Advertisement