அடப்பாவமே சூரியகுமார் யாதவுக்கும் அதே பிராபலமா? சிக்கலில் மும்பை அணி – என்ன பண்ண போறாங்களோ?

SKY
- Advertisement -

இந்தியாவில் துவங்க இருக்கும் ஐபிஎல் தொடரானது அடுத்த இரண்டு மாதங்களுக்கு ரசிகர்களை குஷிப்படுத்த உள்ளதால் தற்போதே இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் அதிகரித்து உள்ளது. மேலும் கடந்த ஆண்டு 8 அணிகள் மட்டுமே விளையாடிய இந்த ஐபிஎல் தொடரானது இந்த ஆண்டு 10 அணிகளுடன் நடைபெற உள்ளதால் இம்முறையும் ரசிகர்களின் பொழுதுபோக்கிற்கு பஞ்சமிருக்காது.

IPL

- Advertisement -

மேலும் இந்த தொடர் முழுவதுமே இந்தியாவில் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்ததன் காரணமாக தற்போது தீவிர பயோ பபுள் வளையத்தில் வீரர்கள் பயிற்சியையும் துவங்கிவிட்டனர். அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணி ஜியோ மைதானத்தில் பயிற்சியை மேற்கொண்டு வரும் வேளையில் அந்த அணியின் ஒரு சில வீரர்கள் காயம் காரணமாக தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஏற்கனவே அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் இந்த ஐபிஎல் தொடரில் இருந்து முழுவதுமாகவே விலகுகிறார் என்று கூறப்பட்டுள்ள வேளையில் தற்போது மும்பை அணியில் முக்கிய வீரரான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் டெல்லி அணிக்கு எதிராக நடைபெறவிருக்கும் முதலாவது போட்டியில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூரியகுமார் யாதவ் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரிலும் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது எதிர்பாராத விதமாக கட்ட விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று சிகிச்சை மற்றும் பயிற்சி எடுத்து வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் அவரது உடற்தகுதி குறித்து வெளியான அறிக்கையில் சூரியகுமார் யாதவின் காயம் குணமடைய மேலும் சில நாட்கள் ஆகும் என்பதனால் டெல்லி அணிக்கு எதிரான முதல் போட்டியை தவறவிடும் என்றும் அவர் ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் இரண்டாவது போட்டியில் மும்பை அணியில் விளையாட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : இந்த வருஷம் என்னால ஆட முடியாதுங்க. சாரி – மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து வெளியேறிய நட்சத்திர வீரர்

ஏற்கனவே மும்பை அணி பல நட்சத்திர வீரர்களை வெளியேற்றிவிட்டு ஏலத்தில் வெவ்வேறு வீரர்களை மாற்றி உள்ளதால் இந்த சீசனை மும்பை அணி வெற்றிகரமாக ஆரம்பிக்குமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மும்பை அணியின் நம்பிக்கை நட்சத்திரமான சூர்யகுமார் யாதவ்க்கும் காயம் ஏற்பட்டு அதிலிருந்து மீளாததால் அந்த அணிக்கு பெரிய சிக்கலை இந்த விடயம் உண்டாக்கி உள்ளது என்றே கூறலாம்.

Advertisement