இந்த வருஷம் என்னால ஆட முடியாதுங்க. சாரி – மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து வெளியேறிய நட்சத்திர வீரர்

MI
- Advertisement -

எதிர்வரும் 26-ஆம் தேதி இந்தியாவில் பதினைந்தாவது ஐபிஎல் தொடரானது கோலாகலமாக துவங்க உள்ளது. இந்த தொடருக்கான ஏற்பாடுகளை மிகச்சரியாக திட்டமிட்டு அட்டவணைப் படுத்தியுள்ள பிசிசிஐ இந்தத் தொடரை வெற்றிகரமாக நடத்தி முடிக்க பல்வேறு விதிமுறைகளை வகுத்து அவைகளை வெளியிட்டு விட்டனர். அந்தவகையில் இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளும் தற்போது தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ipl

- Advertisement -

மேலும் போட்டிகள் அனைத்தும் குறிப்பிட்ட சில மைதானங்களில் மட்டுமே நடைபெற இருப்பதால் இந்த ஐபிஎல் தொடர் முழுவதும் பயோ பபுள் வளையத்தில் எந்தவித பிரச்சினையும் இன்றி விளையாடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி அனைத்து அணிகளும் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் ஒரு சில அணிகளுக்கு முக்கிய வீரர்கள் காயத்தினால் சிக்கி இருப்பதனால் சில சிக்கல்கள் தொடர்ந்து வருகின்றன.

அந்த வகையில் தற்போது மும்பை அணிக்கு இந்த ஐபிஎல் தொடர் தொடங்கும் முன்னரே பெரிய அடி விழுந்திருக்கிறது. ஏனெனில் இந்த ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் 8 கோடி ரூபாய் கொடுத்து வாங்கப்பட்ட இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த ஓராண்டிற்கும் மேலாக கை மூட்டு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக சிகிச்சை பெற்று ஓய்வில் இருந்தார். சர்வதேச கிரிக்கெட்டில் அவர் விளையாடி ஓராண்டுக்கு மேல் ஆகியிருந்தாலும் இந்த ஐபிஎல் தொடரில் நிச்சயம் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Jasprith Bumrah Jofra Archer

ஆனால் தனது காயத்துக்கு சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது பயிற்சி பெற்று வந்தாலும் போட்டிகளில் பங்கேற்று பந்துவீசும் அளவிற்கு தயாராகவில்லை என்று கூறி இந்த வருட ஐபிஎல் தொடரில் இருந்து பின் வாங்கியுள்ளார். இருப்பினும் அவரை எதிர்வரும் இரண்டு ஆண்டுகளில் பயன்படுத்த மும்பை அணி யோசித்து இருக்கிறது. ஆனாலும் இது அவர்களுக்கு பெரிய இழப்பு என்றே கூறலாம். ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாகப் பும்ரா மற்றும் டிரென்ட் போல்ட் ஆகியோரது இணை மும்பை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கினை வகித்தது.

- Advertisement -

இருவரும் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் என்பதனால் மும்பை அணி பந்து வீச்சில் பெரிய ஆதிக்கத்தைச் செலுத்தியது. ஆனால் தற்போது மும்பை அணியில் தரமான வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர் இல்லாதது அந்த அணிக்கு பெரிய இழப்பு என்றே கூறலாம். 2020ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி கடந்த ஆண்டு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தது. அதோடு இந்தாண்டிற்கான அணியில் பல்வேறு நட்சத்திர வீரர்கள் வெளியேறி உள்ளதால் இந்த ஆண்டு மும்பை அணியின் நிலை என்ன என்பதைக் காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க : இந்தியாவாலேயே முடியல, எங்களால் எப்படி முடியும் – தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னரே புலம்பிய சாகிப் அல் ஹசன்

அதேவேளையில் கடந்த ஆண்டு கோப்பையை கைப்பற்றிய நடப்பு சாம்பியனான சென்னை அணி தற்போதும் பலமாகவே உள்ளதால் இந்த ஆண்டும் சென்னை அணியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement