இந்தியாவாலேயே முடியல, எங்களால் எப்படி முடியும் – தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னரே புலம்பிய சாகிப் அல் ஹசன்

Shakib-3
- Advertisement -

தென்ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்கதேச கிரிக்கெட் அணி அங்கு அந்த அணிக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க உள்ளது. இதில் முதலில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் மார்ச் 18, 20, 23 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் மார்ச் 31, ஏப்ரல் 8 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

Bangladesh

- Advertisement -

இந்த தொடரில் பங்கேற்பதற்கான வங்கதேச கிரிக்கெட் அணி கடந்த வாரம் அறிவிக்கப் பட்டது. இதையடுத்து இந்த தொடரில் பங்கேற்பதற்காக அந்த அணி நேற்று தனி விமானம் வாயிலாக தென் ஆப்பிரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்று வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. பொதுவாகவே வங்கதேசத்தை விட வரலாற்றில் வலுவான அணியாக கருதப்படும் தென்னாப்பிரிக்கா இந்த தொடரில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கத்துக்குட்டி வங்கதேசம்:
குறிப்பாக சொந்த மண்ணில் இந்த தொடர் நடைபெறுவதால் ஒரு கத்துக்குட்டியாக இருக்கும் வங்கதேசத்தை எளிதாக வீழ்த்தி தொடரை கைப்பற்றி தென்ஆப்பிரிக்கா கோப்பையை வெல்லும் என நம்பப்படுகிறது. இன்னும் சொல்லவேண்டுமெனில் கடந்த டிசம்பர் மாதம் சொந்த மண்ணில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விராட் கோலி தலைமையிலான உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக இருந்த இந்தியாவிடம் அந்த அணி முதல் போட்டியில் தோல்வியடைந்தது.

INDvsAUS

இருப்பினும் அதற்கெல்லாம் அசராமல் 2-வது போட்டியில் மீண்டெழுந்த அந்த அணி அனுபவம் இல்லாத இளம் வீரர்களை வைத்துக் கொண்டு அடுத்தடுத்த 2 வெற்றிகளை பெற்று 2 – 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி பலரின் பாராட்டுக்களைப் பெற்றது. மறுபுறம் ஒரு சில உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் மட்டுமே இருந்த தென்ஆப்பிரிக்காவிடம் பரிதாப தோல்வி அடைந்த இந்தியா தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்ற கனவை நிஜமாக்க தவறியதுடன் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணி என்ற அந்தஸ்தையும் கோட்டை விட்டது.

- Advertisement -

இந்தியாவால் முடியல:
அப்படிப்பட்ட நிலையில் தென் ஆப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது சாத்தியமற்றது என வங்கதேச நட்சத்திர ஆல்ரவுண்டர் சாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு.”எங்களின் பந்துவீச்சு துறை மிகவும் சிறப்பாக செயல்பட வேண்டும். பொதுவாக எங்களது சொந்த நாட்டில் நாங்கள் சிறப்பாக பந்துவீசிகிறோம். ஆனால் வெளிநாடுகளில் தடுமாறுகிறோம். எனவே அந்த குறையில் நாங்கள் முன்னேற்றம் காண வேண்டும். இருப்பினும் இந்த தொடரில் நாங்கள் வெற்றி பெறுவோம் என நம்புகிறேன். இந்த தொடரில் வெற்றி பெற்றால் அது எங்களுக்கு நிறைய பயனை அளிக்கும்”

Shakib

“தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் வெறும் ஒரு வெற்றியை பெற்றால் கூட எங்களைப் பொறுத்தவரை அது மிகப்பெரிய சாதனையாகும். எனவே எங்கள் அணியில் இருக்கும் இதர வீரர்களும் இதே இலக்குடன் இருப்பார்கள் என நம்புகிறேன். ஆனால் கடைசியாக இங்கு நடந்த கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிராக அவர்கள் அனைத்து போட்டிகளிலும் வென்றார்கள். எனவே இது எங்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும். மேலும் தென்ஆப்பிரிக்க அணியில் நிறைய புது வீரர்கள் உள்ளதால் அவர்களை அனுபவம் இல்லாத அணி என பலரும் கூறுகிறார்கள். ஆனால் அவர்களது அணி உண்மையாகவே சமபலத்துடன் உள்ள அணியாக காணப்படுகிறது” என பாராட்டினார்.

மண்ணை கவ்விய இந்தியா:
அவர் கூறுவது போல தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் படுதோல்வியடைந்த இந்தியா அதன் பின் நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பழிதீர்க்கும் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த தொடரில் ரோகித் சர்மா இல்லாத காரணத்தால் தற்காலிக கேப்டனாக செயல்பட்ட கேஎல் ராகுல் தலைமையில் களமிறங்கிய இந்திய அணி ஒரு வெற்றி கூட பெறாமல் 3 – 0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் தோல்வியை சந்தித்து பெரிய அவமானத்தை சந்தித்தது.

INDvsRSA toss

மொத்தத்தில் ஒரு சில உலகத்தரம் வாய்ந்த வீரர்களை மட்டும் வைத்துக்கொண்டு நிறைய இளம் வீரர்களை வைத்து இந்தியாவை சாய்த்த தென் ஆப்பிரிக்கா உண்மையாகவே சொந்த மண்ணில் வலுவான அணியாக காட்சி அளிக்கிறது. எனவே ஷாகிப் அல் ஹசன் கூறுவதுபோல தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் வெறும் ஒரு வெற்றி பெற்றால் கூட அது வங்கதேச அணியை பொறுத்தவரை உண்மையாகவே மிகப்பெரிய சாதனையாகும்.

Advertisement