ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வரும் 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடருக்கான ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்திய அணியானது லீக் சுற்று போட்டிகளில் ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான் மற்றும் ஓமன் ஆகிய அணிகளை வீழ்த்தி தோல்வியையே சந்திக்காமல் அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருந்தது பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றிருந்தது.
சூப்பர் 4 சுற்று போட்டிக்கான இந்திய அணியில் 2 மாற்றங்கள் :
அந்த வகையில் தற்போது சூப்பர் 4 சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் இந்த சுற்றின் முதல் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்த்து செப்டம்பர் 21-ஆம் தேதி இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் போட்டியில் விளையாட இருக்கிறது.
இந்த போட்டிக்கான டாஸ் சற்று முன்னர் போடப்பட்டு அதில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது. அதனைத்தொடர்ந்து இந்த சூப்பர் 4 சுற்று போட்டிக்கான இந்திய அணியில் ஏதாவது மாற்றம் இருக்குமா? என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் எதிர்பார்த்தபடியே இந்திய அணியின் கேப்டன் சூர்யாகுமார் யாதவ் 2 மாற்றங்களை செய்து இந்திய அணியை அறிவித்துள்ளார்.
அதன்படி கடந்த ஓமன் அணிக்கு எதிரான போட்டியில் ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. அதனால் அந்த போட்டியில் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் விளையாடியிருந்தனர். இந்நிலையில் அவர்கள் இருவரும் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளதால் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மற்றபடி லீக் போட்டிகளில் விளையாடிய அதே அணி தான் இந்த போட்டியிலும் விளையாடுகிறது. கடந்த முறை பாகிஸ்தான் அணியை எளிதாக வீழ்த்தியது போல் இம்முறையும் வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே இந்திய அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்துள்ளது. அதன்படி பாகிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :
இதையும் படிங்க : பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் நிச்சயம் குல்தீப் யாதவ் இதை செய்வார் – சிறுவயது கோச் பேட்டி
1) அபிஷேக் சர்மா, 2) சுப்மன் கில், 3) சூரியகுமார் யாதவ், 4) திலக் வர்மா, 5) சஞ்சு சாம்சன், 6) ஹார்டிக் பாண்டியா, 7) ஷிவம் துபே, 8) அக்சர் படேல், 9) குல்தீப் யாதவ், 10) ஜஸ்ப்ரீத் பும்ரா, 11) வருண் சக்கரவர்த்தி.



