சேப்பாக்கம் மைதானத்தின் கூரைக்கு மேல் 99 மீட்டர் சிக்ஸ் அடித்த சூரியகுமார் யாதவ் – ஆச்சரியமாக பார்த்த வீரர்கள்

Sky
- Advertisement -

இந்த ஐபிஎல் தொடரின் 5வது லீக் மேட்சில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதின. இந்தப் போட்டியில் மும்பை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் தனது முதல் சர்வதேச போட்டியில் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே அற்புதமான ஒரு சிக்சரை அடித்து ஆர்ச்சரை சம்பவம் செய்த சூர்ய குமார் யாதவ் மீண்டும் ஒரு ஒரு அற்புதமான சிக்சரை அடித்தார்.

sky 1

- Advertisement -

இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய சூர்யகுமார் யாதவ் பேட் கம்மின்ஸ் வீசிய 10வது ஓவரின் 5வது பந்தில் அடித்த சிக்ஸர் எல்லோராலும் பாராட்டப்பட்டு வருகின்றது. பேட் கம்மின்ஸ் வீசிய அந்த பந்தானது யார்க்கர் லெந்தில் அமைய அதனையும் தனது ஃபுட் ஒர்க்கால் ஃப்ளிக்காடி சிக்ஸராக மாற்றினார்.

இந்த சிக்ஸரைப் பற்றி பேசிய சூர்யகுமார் யாதவ் தான் சிறுவயதில் சிமெண்டால் ஆன பிட்ச்சில் ரப்பர் பந்தில் விளையாடுவேன். அப்போது ஒரு மூலையில் சிக்ஸரானது 90-95 மீட்டர் இருக்கும். அதற்கேற்றார் போல் அங்கு விளையாடி பழக்கம் ஆனதால் இந்த சாட்டை என்னால் எளிதாக அடிக்க முடிந்திருக்கலாம் என்று கூறினார்.

சூர்ய குமார் யாதவ் அந்த ஷாட்டை அடித்தவுடன் மைதானத்தில் இருந்த சக வீரர்களே ஆச்சர்யத்துடன் பார்த்தனர். ஹர்திக் பாண்ட்டியா எழுந்து நின்று கை தட்டினார். ஷாட்டைக் கண்ட இந்திய முன்னாள் வீரர்கள் ஸ்ரீகாந்த், இர்பான் பதான் மற்றும் பல வீரர்கள் சூர்யகுமார் யாதவை புகழ்ந்து தள்ளிவருகின்றனர். மேலும்நெடரடிசன்கள் பலரும் இந்த ஷாட்டை இணையளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி இந்த ஷாட் இணையத்தில் வைரலாகி வருகிறது. 99 மீட்டர் அடிக்கப்பட்ட இந்த சிக்ஸர் ஆனது நேற்றைய போட்டியில் அடிக்கப்பட்ட பெரிய சிக்ஸராக அமைந்தது.

Advertisement