பைனலில் வென்று கோப்பையை வாங்க மேடைக்கு வந்தால் சூரியகுமார் என்ன செய்வார்? – புறக்கணிக்க வாய்ப்பிருக்கா?

Suryakumar Yadav and Trophy
- Advertisement -

2025-ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியானது இன்று செப்டம்பர் 28-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் இரவு 8 மணிக்கு துவங்க இருக்கிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள இந்த போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி கோப்பையை ஏந்தப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

சூரியகுமார் யாதவ் கோப்பையை வாங்குவாரா? :

போட்டி நடைபெற இருக்கும் துபாய் மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வரும் வேளையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு கோப்பையை வழங்க ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவருமான மோசின் நக்வி துபாய் வருகை தரவுள்ளார்.

- Advertisement -

ஏற்கனவே இந்த ஆசிய கோப்பை தொடரானது துவங்கும்போது அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த போது இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மோசின் நக்வியுடன் கை குலுக்கி இருந்தார். ஆனால் அதற்கடுத்து நடைபெற்ற லீக் போட்டிகளிலும் சரி, சூப்பர் 4 சுற்று ஆட்டத்தின் போதும் சரி இந்திய அணியின் கேப்டனான சூரியகுமார் யாதவ் பாகிஸ்தான் அணியின் கேப்டனுடன் கை குலுக்கவில்லை.

அதுமட்டும் இன்றி எந்த ஒரு இந்திய வீரரும் பாகிஸ்தான் வீரர்களுடன் கை கொடுக்கவில்லை. ஒட்டுமொத்தமாகவே இந்திய அணியின் வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்காமல் இடைவெளியை கடைப்பிடித்து வந்தனர். இந்நிலையில் இன்று நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை வெல்லும் பட்சத்தில் சூரியகுமார் யாதவ் மேடையில் மோசின் நக்வியிடம் இருந்து கோப்பையை பெற்றுக் கொள்வாரா? என்கிற பரபரப்பான ஒரு சூழல் தற்போது எழுந்துள்ளது.

- Advertisement -

ஏனெனில் மோஷன் நக்வி ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருப்பது மட்டுமின்றி பாகிஸ்தானின் உள்துறை அமைச்சராகவும் இருந்து வருகிறார். அதுமட்டும் இன்றி இந்தியாவை விமர்சிக்கும் வகையிலும் சில காணொளிகளை தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறார். இதன் காரணமாக அவர் கோப்பையை வழங்கும் பட்சத்தில் அந்த பரிசளிப்பு விழாவை சூரியகுமார் யாதவ் புறக்கணிக்க வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளன.

இதையும் படிங்க : ஆசிய கோப்பை இறுதிப்போட்டியானது மழையால் நின்றால் என்ன ஆகும்? ரூல்ஸ் கூறுவது என்ன? – விவரம் இதோ

இப்படி ஒரு பரபரப்பான சூழல் இந்த போட்டியின் இறுதியில் ஏற்பட உள்ளது. இதனை சூர்யகுமார் யாதவ் எவ்வாறு கையாளப்போகிறார்? பிசிசிஐ கேப்டனுக்கு என்ன உத்தரவு வழங்கப்போகிறது? என்பது போன்ற பல எதிர்பார்ப்புகளுடன் இன்றைய இறுதிப்போட்டி நடைபெற உள்ளதால் ரசிகர்கள் மத்தியிலும் இந்த போட்டி படு சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வரை வெளியாகியுள்ள தகவலின் படி சூர்யகுமார் யாதவ் மோஷின் நக்வியின் கைகளில் இருந்து டிராஃபியை பெற்றுக் கொள்ள மாட்டார் என்றே தெரிகிறது.

Advertisement