- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஆசிய கோப்பைக்கு கேப்டனாக திரும்பும் சூரியகுமார் யாதவ்.. இந்திய அணி அறிவிப்பு எப்போது? – விவரம் இதோ

இந்திய கிரிக்கெட் அணியானது அடுத்ததாக 2025 ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. நடப்பு சாம்பியனாக இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் இந்த இந்திய அணியில் எந்தெந்த வீரர்களுக்கு இடம் கிடைக்கும்? யார் கேப்டனாக அறிவிக்கப்படுவார்கள்? என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே இந்திய அணித்தேர்வு முடிந்து எப்போது வீரர்களின் பட்டியல் வெளியாகும் என்பதே பலரது கேள்வியாகவும் இருந்து வருகிறது.

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு எப்போது? :

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு தகவலின் படி இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மீண்டும் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக திரும்புவார் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே ஹெர்னியா என்கிற குடலிறக்க பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த சூரியகுமார் யாதவ் அதற்கான அறுவை சிகிச்சையை மேற்கொண்டார்.

- Advertisement -

பின்னர் படிப்படியாக பயிற்சியை துவங்கிய அவர் தற்போது நலமுடன் இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டும் இன்றி பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் பேட்டிங் பயிற்சி செய்த அவர் தனது உடற்தகுதியை நிரூபித்து விட்டார் என்றும் அந்த சோதனைக்கு பின்னர் பெங்களூருவில் இருந்து மும்பை திரும்பியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. அதற்கு காரணம் யாதெனில் :

எதிர்வரும் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி வீரர்களின் தேர்வு மும்பையில் நடைபெற உள்ளதால் அதில் கலந்து கொள்ளவே கேப்டன் சூர்யகுமார் யாதவ் பெங்களூரில் இருந்து மும்பை சென்றுள்ளார். அந்த மீட்டிங்கில் இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், கேப்டன் சூர்யகுமார் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் மற்றும் அவரது குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

- Advertisement -

அந்த மீட்டிங்குக்கு பிறகு ஆகஸ்ட் 19-ஆம் தேதி ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை அஜித் அகார்கர் மற்றும் கம்பீர் ஆகியோர் வெளியிடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கிடைத்துள்ள தகவலின் படி ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதனால் அக்சர் பட்டேல் பதவி நீக்கப்பட்டு கில்லுக்கு இந்த புதிய பதவி வழங்கப்பட இருக்கிறது.

இதையும் படிங்க : “ஐ ஹேட் திஸ் சோ மச்” தனது காயம் குறித்த தகவலை வெளியிட்ட ரிஷப் பண்ட் – விவரம் இதோ

ஏற்கனவே டி20 அணியில் இடம் பிடிப்பார்கள் என்று பேசப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர் மாற்று யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு இந்த தொடரில் வாய்ப்பு கிடைக்காது என்று கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே விளையாடி வரும் இளம் வீரர்களை கொண்ட டி20 அணியையே ஆசிய கோப்பை தொடருக்கான அணியாகவும் தேர்வு செய்ய நிர்வாகம் விரும்புவதாக தெரிகிறது.

- Advertisement -