“ஐ ஹேட் திஸ் சோ மச்” தனது காயம் குறித்த தகவலை வெளியிட்ட ரிஷப் பண்ட் – விவரம் இதோ

Rishabh Pant
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். இந்த தொடரின் போது ஒரே டெஸ்டில் இரண்டு இன்னிங்ஸ்களில் சதம் அடித்த அவர் இங்கிலாந்து மண்ணில் ஏகப்பட்ட சாதனைகளை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாக நிகழ்த்தி அசத்தியிருந்தார்.

காயம் குறித்த தகவலை வெளியிட்ட ரிஷப் பண்ட் :

அவரது இந்த சிறப்பான ஆட்டம் பலரது மத்தியிலும் பாராட்டினை பெற்றிருந்தது. ஆனால் இந்த தொடரில் நான்காவது டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான கிரிஸ் வோக்ஸ் வீசிய பந்தினை ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய ஆசைப்பட்ட ரிஷப் பண்ட் அந்த பந்தினை தவறவிட்டு கால் பகுதியில் அடிவாங்கினார்.

- Advertisement -

அதனால் மைதானத்திலேயே வலியால் துடித்த அவருக்கு முதலுதவி செய்ய மருத்துவக்குழு முற்பட்டது. இருந்தாலும் அவரது காலில் ஏற்பட்ட காயம் பெரியதாக இருந்ததால் களத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட அவர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு செய்யப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் கண்டறியப்பட்டது. பின்னர் இந்திய அணியின் இக்கட்டான சூழல் காரணமாக எலும்பு முறிவுடன் முதல் இன்னிங்சின் போது களத்தில் வந்து பேட்டிங் செய்த ரிஷப் பண்ட் அனைவரையும் நெகிழ வைத்திருந்தார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து நான்காவது டெஸ்ட் போட்டியுடன் இந்திய அணியில் இருந்து விலகிய அவர் தற்போது தனது காயத்திற்கான அறுவை சிகிச்சை மேற்கொண்டு மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார். இந்நிலையில் இங்கிலாந்தில் இருந்து நாடு திரும்பிய பின்னர் முதன்முறையாக தனது காயம் குறித்த முக்கிய அறிவிப்பினை ரிஷப் பண்ட் பதிந்துள்ளார்.

இதையும் படிங்க : நேர்மையான மனிதர் பும்ரா அங்க செஞ்சதை தான்.. சிராஜ் இங்கிலாந்தில் செஞ்சாரு.. ஹர்பஜன் பதிலடி

அந்தவகையில் அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் : காலின் பாதத்தில் பேன்டேஜுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து “ஐ ஹேட் திஸ் சோ மச்” என தனது வலியை பகிர்ந்துள்ளார். இந்த காயத்தினால் அவர் எதிர்வரும் ஆசிய கோப்பை தொடர் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர் ஆகியவறறை அவர் தவறவிட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement