நேர்மையான மனிதர் பும்ரா அங்க செஞ்சதை தான்.. சிராஜ் இங்கிலாந்தில் செஞ்சாரு.. ஹர்பஜன் பதிலடி

Harbhajan Singh
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 – 2 என்ற கணக்கில் சமன் செய்தது. அந்த வெற்றிகளுக்கு பந்து வீச்சுத் துறையில் முகமது சிராஜ் 23 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றினார். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜஸ்ப்ரித் பும்ரா பணிச்சுமை காரணமாக 3 போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.

ஆச்சரியப்படும் வகையில் அந்த 3 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெறவில்லை. அதன் காரணமாக ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் ஜஸ்ப்ரித் பும்ராவை இந்தியாவைச் சேர்ந்தவர்களே விமர்சித்து வருகிறார்கள். உண்மையில் கடந்த ஆஸ்திரேலிய தொடரில் சிராஜ் உள்ளிட்ட மற்ற அனைத்து பவுலர்களும் தடுமாற்றமாக பவுலிங் செய்தார்கள். அப்போது 5 போட்டிகளிலும் முழுமையாக விளையாடிய பும்ரா 32 விக்கெட்டுகளை எடுத்து தனியாளாக ஆஸ்திரேலியாவுக்கு சிம்ம சொப்பனமாக செயல்பட்டார்.

- Advertisement -

ஆஸியில் தாங்கிய பும்ரா:

அதனாலேயே கடைசிப் போட்டியில் காயத்தைச் சந்தித்த அவர் முதுகில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதன் காரணமாக இங்கிலாந்தில் தம்மால் 5 போட்டிகளிலும் விளையாட முடியாது என்று பும்ரா ஆரம்பத்திலேயே சொல்லி விட்டார். அப்படியிருந்தும் அவருடைய நிலையைப் புரிந்து கொள்ளாமல் பலரும் விமர்சிப்பதாக ஹர்பஜன் சிங் பதிலடி கொடுத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் பும்ரா 5 போட்டிகளில் விளையாடியதைப் போல இங்கிலாந்தில் சிராஜ் அனைத்துப் போட்டிகளிலும் விளையாடி இந்தியாவை தாங்கிப் பிடித்ததே பணிச்சுமை என்பதற்கான அர்த்தம் என்று ஹர்பஜன் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஜஸ்ப்ரித் பும்ரா எவ்வளவு வலியைச் சந்திக்கிறார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அவர் மிகவும் நேர்மையான மனிதர் என்பது எனக்குத் தெரியும்”

- Advertisement -

இங்கிலாந்தில் தாங்கிய சிராஜ்:

“தம்முடைய உடலைப் பற்றியும், அது எவ்வளவு பாரத்தை ஏற்றுக்கொள்ளும் என்பது பற்றி பும்ராவுக்கு மட்டுமே தெரியும். காயத்திலிருந்து மீண்டும் வந்துள்ள அவரிடம் பணிச்சுமை என்றால் என்ன? என்று பலரும் கேட்கிறார்கள். பணிச்சுமை என்பது ஆஸ்திரேலியாவில் பும்ரா எப்படி பந்து வீசினார் என்பதாகும். அதாவது அவர் மற்றவர்களுடைய சுமையையும் சேர்த்து பவுலிங் செய்தார்”

இதையும் படிங்க: அதெல்லாம் உண்மையில்ல.. விராட், ரோஹித்தை அவங்க தான் அரசியல் பண்ணி ரிட்டையராக வெச்சாங்க.. கர்சன் கர்வி

“சமீபத்தில் சிராஜ் அதை செய்தார். ஆனால் பும்ராவால் அதை வருடம் முழுவதும் செய்ய முடியாது. சில நேரங்களில் எக்ஸ்ட்ரா முயற்சியைப் போட்டால் உங்களுடைய உடல் தாங்காது என்ற நிலைமை வரும். ஆஸ்திரேலியாவில் எக்ஸ்ட்ரா முயற்சியைப் போட்ட பும்ரா கடைசிப் போட்டியில் உடைந்தார். இங்கிலாந்தில் அதை நாம் உடைய மாட்டோம் என்ற நம்பிக்கையுடன் சிராஜ் செய்தார். எனவே இந்த விஷயத்தில் வீரர்களின் நேர்மையே மிகவும் முக்கியம் என்று நினைக்கிறேன்” எனக் கூறினார்.

Advertisement