அதெல்லாம் உண்மையில்ல.. விராட், ரோஹித்தை அவங்க தான் அரசியல் பண்ணி ரிட்டையராக வெச்சாங்க.. கர்சன் கவ்ரி

Karsan Gharvi
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் நிறைய வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்கள். 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் அவர்கள் இளம் வீரர்களுக்கு வழிவிட்டு சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் ஓய்வு பெற்றனர். அடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா தொடர்களில் அவர்கள் சுமாராக விளையாடியது இந்தியாவின் தோல்விக்கு காரணமானது.

அதனால் கடுமையான விமர்சனங்களை சந்தித்த அவர்கள் இங்கிலாந்து தொடரில் விளையாடி பதிலடி கொடுக்க தயாரானார்கள். அதனாலேயே அவர்கள் பல வருடங்கள் கழித்து ரஞ்சிக் கோப்பையில் விளையாடினார்கள். ஆனால் கடைசி நேரத்தில் அவர்களை கழற்றி விட்டு இளம் அணியை தேர்ந்தெடுக்க தேர்வுக்குழுவினர் முடிவெடுத்தார்கள். அதற்கு முன்பாக தாமாகவே ரோஹித் சர்மா இன்ஸ்டாகிராமில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

- Advertisement -

விரும்பிய விராட், ரோஹித்:

அடுத்த சில நாட்களில் விராட் கோலியின் 10000 ரன்கள் அடிக்கும் வாய்ப்பைத் தவற விட்டு ஓய்வு பெறுவதாக ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் விராட், ரோஹித் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாட விரும்பியதாக முன்னாள் இந்திய வீரர் கர்சன் கவ்ரி கூறியுள்ளார். ஆனால் பிசிசிஐ அரசியல் செய்து அவர்களை வலுக்கட்டாயமாக ஓய்வு பெற வைத்ததாக அவர் விமர்சித்துள்ளார்.

சமீபத்தில் விராட், ரோஹித் சர்மாவை கட்டாயப்படுத்தவில்லை, அவர்களுடைய விருப்பப்படி ஓய்வு பெற்றதாக பிசிசிஐ துணைத் தலைவர் ராஜிவ் சுக்லா தெரிவித்திருந்தார். அதெல்லாம் உண்மையில்லை என்று தெரிவிக்கும் கர்சன் கவ்ரி இது பற்றி பேசியது பின்வருமாறு. “விராட் இன்னும் சில வருடங்கள் இந்தியாவுக்காக எளிதாக விளையாடியிருக்க முடியும். ஆனால் ஏதோ ஒரு விஷயம் அவரை ஓய்வு பெறச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளது”

- Advertisement -

அனுப்பிய பிசிசிஐ அரசியல்:

“துரதிஷ்டவசமாக விராட் கோலி ஓய்வு பெற்ற போது பிசிசிஐ அவருக்கு ஃபேர்வெல் கொடுக்கவில்லை. பிசிசிஐ, இந்திய கிரிக்கெட்டுகாகவும் ரசிகர்களுக்காகவும் ஏராளமான பங்காற்றிய விராட் கோலி போன்றவருக்கு சிறப்பான வழியனுப்புதல் (ஃபேர்வெல்) கொடுத்திருக்க வேண்டும். இவை அனைத்தும் பிசிசிஐ’க்குள் நடக்கும் உள் அரசியல் பற்றியது”

இதையும் படிங்க: தோனியால் தான் எனக்கும் அந்த மோசமான நிலைமை ஏற்பட்டுச்சு – இர்பான் பதான் குற்றச்சாட்டு

“அதை நாம் புரிந்து கொள்வது கடினம். அதுவே விராட் முன்கூட்டியே ஓய்வு பெறுவதற்கான காரணமாக இருந்திருக்கலாம். ரோஹித் சர்மாவும் முன்கூட்டியே ஓய்வு பெற்றார். அவர்கள் அணியை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். உண்மையில் அவர்கள் வெளியேற விரும்பவில்லை. தொடர்ந்து விளையாட விரும்பினார்கள். ஆனால் தேர்வாளர்கள் மற்றும் பிசிசிஐ வேறு ஐடியாவை கொண்டிருந்தார்கள். அது ஒரு வித அற்ப அரசியல் விஷயம்” என்று கூறினார்.

Advertisement