சூரியகுமார் யாதவ் vs கோலி எதிரான சண்டை. இணையத்தை கலக்கும் ஹாட் பைட் – என்ன நடந்தது ?

SKY

கடந்த சில தினங்களுக்கு முன்னர் விராட் கோலியின் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும், கைரன் பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையிலான ஒரு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி தட்டுத்தடுமாறி 165 ரன்கள் எடுத்தது. அதன் பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி ஒருகட்டத்தில் சரிவின் பாதையில் இருந்தாலும் சூரியகுமார் 43 பந்துகளில் 79 ரன்கள் விளாசினார்.

sky 2

இதில் 13 பவுண்டரிகள் 3 சிக்சர் அடங்கும். இதன் காரணமாக 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்த வருட ஐபிஎல் தொடரில் முதன் முதலாக பிளே ஆப் சுற்றுக்கு சென்ற அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி தகுதி பெற்றது.
இந்த போட்டியின் போது ஒரு மிக சுவாரஸ்யமான சம்பவம் நடைபெற்றது.

சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து முன்னேறிக் கொண்டிருந்தார். அவர் ஒரு பந்தை அடிக்கும் போது அந்த பந்தை விராட்கோலி பிடித்தார். பிடித்துவிட்டு இளம் வீரரான சூர்யகுமார் யாதவ் நோக்கி அவரை முறைத்துக்கொண்டே நெருங்கி வந்தார். இந்திய அணியின் கேப்டனாக இருந்தாலும் விராட் கோலியை தானும் முறைத்தார் சூர்யகுமார் யாதவ். இது சமூகவலைதளத்தில் பெரிதாகப் பேசப்பட்டது.

sky 1

விராட் கோலிக்கு அஞ்சாமல் சூர்யகுமார் யாதவ் மவுனமாக அதனை பார்த்துக்கொண்டே இருந்தார். இதனை மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டிகளுக்கான அணி அறிவிக்கப்பட்டது இதில் சூரியகுமார் இடம் பெறுவார் என்று எதிர்பார்த்தார் ஆனால் அவர் இடம் பெறவில்லை.

- Advertisement -

SKY

கடந்த நான்கு வருடங்களாக ஐபிஎல் தொடரில் நன்றாக விளையாடியும் உள்ளூர் போட்டிகளில் நன்றாக விளையாடி இருக்கிறார் சூர்யகுமார் யாதவ் தன்னை அணியின் எடுக்காத விரக்தியில் தான் சூர்யகுமார் யாதவ் இந்த போட்டியில் தனது அதிரடி ஆட்டம் மூலம் விராட் கோலிக்கு இப்படி பதிலடி கொடுத்தார் என்று ஒரு சில ரசிகர்கள் பேசி வருகின்றனர்.