
இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் அண்மையில் நடைபெற்று முடிந்த 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்த வேளையில் இந்த தொடரில் இந்திய அணி சார்பாக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான சஞ்சு சாம்சன் 5 போட்டிகளில் விளையாடும் 321 ரன்களை குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவியோடு தொடர் நாயகன் விருதினையும் வென்று அசத்தியிருந்தார். அவரது இந்த சிறப்பான செயல்பாடு பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.
இந்த உலககோப்பை தொடரை பொருத்தவரை லீக் சுற்று போட்டிகளின் போது வாய்ப்பு கிடைக்காமல் வெளியில் அமர்ந்திருந்த அவர் திடீரென அணியின் காம்பினேஷன் காரணமாக வாய்ப்பினை பெற அதனை கெட்டியாக பிடித்துக் கொண்டு முக்கியமான போட்டிகளில் இந்திய அணிக்காக அதிரடியான ரன் குவிப்பை வழங்கி வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார். அதிலும் குறிப்பாக இறுதிப் போட்டியிலும் 89 ரன்கள் குவித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் இந்த உலக கோப்பை தொடரின் போது தான் சஞ்சு சாம்சனிடம் என்ன வேண்டுகோள் வைத்தேன்? என்பது குறித்து இந்திய அணியின் பேட்டிங் பேச்சாளரான சிதான்சு கோட்டக் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்தவகையில் அவர் கூறியதாவது : நாங்கள் பிளேயிங் லெவனில் இல்லாத வீரர்களுக்கும் நம்பிக்கை அளித்து வைத்திருந்தோம். அதற்கு சரியான உதாரணம் சஞ்சு சாம்சன் தான். ஏனெனில் அவர் பிளேயிங் லெவனில் இடம்பெற்று விளையாடாமல் வெளியில் இருந்த போதும் நல்ல நம்பிக்கையுடன் இருந்தார். எனவே அவருக்கு கிடைக்கும் வாய்ப்பில் பேட்டிங் செய்ய தயாராக இருக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தேன்.
அது மட்டுமின்றி சஞ்சு சாம்சன் என்னிடம் நீங்கள் எப்போது என்னை உள்ளே சென்று விளையாட சொன்னாலும் நான் மிகச் சிறப்பாக விளையாடுவேன் என்று கூறியிருந்தார். அவர் சொன்னபடியே சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தியிருந்தார். நான் அவரிடம் இந்த தொடரின் போது சதம் அடிக்க வேண்டும் என்று கூறியிருந்தேன்.
இதையும் படிங்க : என்னுடைய பதவிக்காலம் முடியும் முன்னர் நான் இதை செய்வேன்.. அதுவே என் இலக்கு – கவுதம் கம்பீர் கருத்து
அப்போது அவர் என்னை பார்த்து ஒருபுறம் தனிப்பட்ட சாதனைகள் குறித்து யோசிக்கக்கூடாது என்கிறீர்கள்? ஆனால் சதம் அடிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? இரண்டு விஷயங்களும் எப்படி சாதகமாகும்? என்று நகைச்சுவையான ஒரு பதிலை அளித்தார். இந்த தொடரில் அவர் தனிப்பட்ட சாதனைக்காகவோ, சதத்தினை நோக்கியோ பயணிக்கவில்லை அணியின் ரன் ரேட்டை குறைக்கக்கூடாது என்று முக்கியமான நேரத்திலும் அட்டாக் செய்து விளையாடினார் என சஞ்சு சாம்சனை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.