என்னுடைய பதவிக்காலம் முடியும் முன்னர் நான் இதை செய்வேன்.. அதுவே என் இலக்கு – கவுதம் கம்பீர் கருத்து

Gautam Gambhir IND
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரான ராகுல் டிராவிடின் பதவி விலகலுக்குப் பிறகு புதிய பயிற்சியாளராக பிசிசிஐ-யின் மூலம் கௌதம் கம்பீர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் தடுமாற்றத்தை சந்தித்து வந்தாலும் ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக 2025 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2026 டி20 உலக கோப்பை என அடுத்தடுத்த ஐசிசி கோப்பைகளை வென்ற பயிற்சியாளர் என்ற பெருமையும் கௌதம் கம்பீர் பெற்று இருக்கிறார்.

தன்னுடைய இலக்கு குறித்து பேசிய : கவுதம் கம்பீர்

டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரை தற்போது உள்ள வீரர்களை மெருகேற்ற இன்னும் சற்று கால அவகாசம் வேண்டும் என்றும் பெரிய வீரர்கள் விட்டு சென்ற இடத்தை இளம் வீரர்களை கொண்டு நிரப்புவது கொஞ்சம் சவாலான விடயம் என்பதனால் அதற்கான நேரம் வரும்போது நிச்சயம் இந்திய டெஸ்ட் அணியை பலப்படுத்துவேன் என்றும் கூறியிருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடர் முடிந்த கையோடு தனது பயிற்சியாளர் பதவிக்காலத்தில் தான் என்ன செய்ய இருக்கிறேன்? என்பது குறித்தும் சில கருத்துக்களை கௌதம் கம்பீர் பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : என்னை பொறுத்தவரை தனிப்பட்ட சூப்பர் ஸ்டாரை உருவாக்க முயற்சிக்க மாட்டேன். ஒரு சூப்பர் அணியை உருவாக்குவது தான் பயிற்சியாளராக என்னுடைய முதன்மை பணியாக கருதுகிறேன்.

எந்த ஒரு தனிப்பட்ட சூப்பர் ஸ்டார் வீரருக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள்? ஊடகங்களில் அந்த வீரருக்கு எவ்வளவு டிஆர்பி இருக்கிறது? என்றெல்லாம் பார்க்க மாட்டேன். அனைவரையும் பாரபட்சமின்றி நேர்மையாக சமமாக நடத்த வேண்டும். எங்களுடைய ட்ரெஸ்ஸிங் ரூமில் இருக்கக்கூடிய 15 வீரர்களும் எனக்கு சமம் தான். எப்படிப்பட்ட வீரர் அணிக்கு தேவை? எந்தெந்த வீரர்கள் இருந்தால் அணியின் பலம் அதிகரிக்கும்? என்பதை கருத்தில் கொண்டு முடிவுகளை எடுப்பேன்.

- Advertisement -

இதையும் படிங்க : அந்த ஒரு இந்திய வீரர் மட்டும் நம்ம டீம்ல இருந்திருந்தா இங்கிலாந்து தான் சாம்பியன் – மைக்கல் வாகன் பேச்சு

பலமான அணிக்கு தேவையான வீரர்களை கட்டமைத்து ஒரு சூப்பர் அணியை உருவாக்குவது தான் என்னுடைய பதவிக்காலத்தில் நான் செய்ய இருக்கிறேன். என்னுடைய பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னதாக நான் ஒரு சூப்பர் இந்திய அணியை உருவாக்குவேன் என்று நம்புவதாகவும் கௌதம் கம்பீர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement