- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இப்போவாச்சும் கம்பீர் கணக்கு புரியுதா.. ராணா மட்டும் இல்லனா இந்தியா தோத்துருக்கும்.. கோட்டக் பேட்டி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ராஞ்சியில் நவம்பர் 30ஆம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா போராடி 17 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 350 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அடுத்ததாக விளையாடிய தென் ஆப்பிரிக்கா முழுமூச்சுடன் போராடியும் 332 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

இந்திய அணியின் வெற்றிக்கு பேட்டிங் துறையில் அதிகபட்சமாக விராட் கோலி 135, ரோஹித் சர்மா 57, கேப்டன் ராகுல் 60, ஜடேஜா 32 ரன்கள் குவித்து பங்காற்றினார்கள். பந்து வீச்சுத் துறையில் குல்தீப் யாதவ் 4, ஹர்ஷித் ராணா 3, அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகள் எடுத்து 1 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரில் இந்தியா முன்னிலை பெற உதவுவினார்கள்.

- Advertisement -

அசத்திய ராணா:

முன்னதாக 2024 ஐபிஎல் கோப்பையை கொல்கத்தா வெல்ல உதவிய ஹர்ஷித் ராணாவுக்கு இந்திய அணியின் பயிற்சியாளராக வந்தது முதல் கௌதம் கம்பீர் வாய்ப்புகளை அள்ளி வழங்கி வருகிறார். அந்த வாய்ப்பில் பெரும்பாலும் சுமாராக பந்து வீசிய அவர் கடுமையான விமர்சனங்களை சந்தித்தார். அதற்கு 23 வயது குழந்தை ராணாவை விமர்சிப்பது வெட்கக்கேடானது என்று பதிலடி கொடுத்த கம்பீர் தொடர்ந்து வாய்ப்பளித்து வருகிறார்.

அந்த சூழ்நிலையில் இப்போட்டியில் ரியன் ரிக்கல்டன், குவிண்டன் டீ காக் ஆகிய தென்னாப்பிரிக்க துவக்க வீரர்களை ராணா டக் அவுட்டாக்கி மிரட்டினார். மேலும் மிடில் ஆர்டரில் அச்சுறுத்தலைக் கொடுத்த தேவால்ட் பிரேவிஸை 37 (28) ரன்களில் காலி செய்த அவர் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார். இந்நிலையில் ராஞ்சி போட்டியில் ராணா மட்டும் ஆரம்பத்திலேயே 2 விக்கட்டுகள் எடுக்காமல் போயிருந்தால் இந்தியா வென்றிருக்காது என்று பேட்டிங் பயிற்சியாளர் சித்தான்சு கோட்டாக் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

கம்பீர் கணக்கு:

இதையெல்லாம் கணக்கிட்டு தான் அவருக்கு கம்பீர் தொடர்ந்து வாய்ப்பளித்து வருவதாகக் கூறும் கோட்டக் இது பற்றி பேசியது பின்வருமாறு. “350 ரன்கள் கட்டுப்படுத்துவதற்கு போதுமானது. ஆனால் இரவு நேரத்தில் பனியின் காரணமாக எங்கள் பவுலர்கள் பந்தை சரியாக கூட பிடிக்க முடியாமல் தடுமாறினர். பந்து வழுக்கிக்கொண்டு நேராக பேட்டுக்கு வந்தது. எனவே ஆரம்பத்திலேயே அந்த விக்கெட்டுகளை எடுத்ததற்காக ராணாவுக்கு நிறைய பாராட்டுக்களைக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்”

இதையும் படிங்க: விராட் கோலி லண்டனில் பயிற்சி செய்வது ஏன்? நெட் பிராக்டீஸ் கூட அங்கதான் – ரவிச்சந்திரன் அஷ்வின் விளக்கம்

“இல்லையென்றால் அவ்வளவு பனி இருந்ததைப் பயன்படுத்தி தென்னாப்பிரிக்கா எளிதாக சேசிங் செய்திருக்கும். எங்கள் அணி தொடர்ச்சியாக டாஸ் தோற்றும் வெற்றி பெறுவது பாராட்டுக்குரியது. ராணா முதல் 2 – 5 ஓவர்களில் பந்தை சிறப்பாக ஸ்விங் செய்து அசத்தினார். அவர் தமக்குக் கிடைத்த வாய்ப்புகளை அதிகம் பயன்படுத்திக் கொண்டார்” என்று கூறினார்.

- Advertisement -