விராட் கோலி லண்டனில் பயிற்சி செய்வது ஏன்? நெட் பிராக்டீஸ் கூட அங்கதான் – ரவிச்சந்திரன் அஷ்வின் விளக்கம்

Ashwin and Kohli
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் இருந்து வெளியேறி லண்டனில் வசித்து வருகிறார். அதன் காரணமாக இந்திய அணிக்காக அவர் எப்போது விளையாட வேண்டும் என்று வந்தாலும் லண்டனில் இருந்து நேராக இந்திய அணியுடன் இணைகிறார். மற்றபடி அவர் இந்தியாவில் கிரிக்கெட் சம்பந்தமான பயிற்சிகளை மேற்கொள்வதில்லை.

லண்டனில் விராட் கோலி பயிற்சி செய்வது ஏன்? : ரவிச்சந்திரன் அஷ்வின்

அதோடு இந்திய அணிக்காக ஒவ்வொரு தொடரிலும் விளையாடி முடித்த பிறகு அவர் லண்டன் சென்று விடுகிறார். அதனால் அவர் இந்தியாவில் பயிற்சிகளை பயிற்சிகளை மேற்கொள்வது கிடையாது. இந்திய அணி கடைசியாக விளையாடிய ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கு முன்னதாக லண்டனில் பயிற்சி பெற்ற பின்னர் தான் இங்கு வந்து விளையாடி இருந்தார்.

- Advertisement -

அதோடு ஆஸ்திரேலிய தொடர் முடிந்த கையோடு லண்டன் சென்ற அவர் மீண்டும் தற்போது நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்கா தொடருக்கு முன்னதாக அங்கு பயிற்சி செய்த பின்னரே இந்தியா வந்திருந்தார். இப்படி விராட் கோலி இந்தியாவில் பயிற்சி செய்யாதது குறித்து பல்வேறு விமர்சனங்கள் அவர்மீது இருந்து வருகின்றன.

இந்நிலையில் விராட் கோலி தனியாக பயிற்சி செய்வது ஏன்? என்பது குறித்தும் அவருடைய ஆட்டம் குறித்தும் இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : விராட் கோலி சத்தம் இல்லாத இடத்தில் இருக்க விரும்புகிறார். இந்திய அணியோடு பயணிக்காமல் தனித்து பயிற்சி செய்ய காரணமே பிரபலம் இல்லாமல் இயல்பான ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காகத்தான்.

- Advertisement -

இந்தியாவிலிருந்து வெளியேறிய அவர் தற்போது லண்டனில் வசித்து வருவதாலே அங்கு பயிற்சி செய்து வருகிறார். எங்கு பயிற்சிகளை மேற்கொண்டாலும் அவருக்கு நல்ல தரமான பயிற்சி கிடைக்கிறது. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டியில் கூட அவர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

இதையும் படிங்க : உலகக்கோப்பை பத்தி யோசிக்காம அவங்க கேமை பார்த்து என்ஜாய் பண்ணுங்க – இர்பான் பதான் கருத்து

அவர் விளையாடும் போது அவருடைய ஆர்வம் வெளிப்படுகிறது. அவர் இனியும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் கிடையாது. அதனால் அவரை இயல்பாக அவரது வழியில் விட வேண்டும். தற்போது கரியரின் கடைசி கட்டத்தில் இருக்கும் அவர் மகிழ்ச்சியாக விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன் என ரவிச்சந்திரன் அஷ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement