2வது டெஸ்டில் சுப்மன் கில்லுக்கு பதில் விளையாடப் போவது யார்? இந்திய கோச் கோட்டாக் பதில்

Sitanshu Kotak 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற தென்னாப்பிரிக்கா 15 வருடங்கள் கழித்து இந்தியாவில் ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. மறுபுறம் சொந்த மண்ணில் குறைந்தபட்ச இலக்கை (124) சேசிங் செய்ய முடியாமல் இந்தியா மோசமான தோல்வியைச் சந்தித்தது.

அந்தத் தோல்விக்கு கொல்கத்தாவில் அமைக்கப்பட்டிருந்த சுழலுக்கு சாதகமான ஆடுகளம் முக்கிய காரணமாக அமைந்தது. அது போக இந்திய கேப்டன் சுப்மன் கில் கழுத்து வலியால் முதல் இன்னிங்ஸில் 4* ரன்கள் எடுத்திருந்த போது பாதியிலேயே வெளியேறினார். தொடர்ந்து மருத்துவமனைக்குச் சென்ற அவர் 2வது இன்னிங்ஸில் விளையாடாதது இந்தியாவின் தோல்விக்கு மற்றொரு காரணமாக அமைந்தது.

- Advertisement -

சுப்மன் கில்லுக்கு பதில்:

இதற்கிடையே கழுத்தில் ஏற்பட்ட தசை பிடிப்பு காயம் பெரிதாக இருப்பதால் சுப்மன் கில் 2வது விளையாடுவதற்கு வாய்ப்பில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அதை இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சித்தான்சு கோட்டக் உறுதி செய்துள்ளார். அத்துடன் 2வது போட்டியில் சுப்மன் கில்லுக்கு பதிலாக துருவ் ஜுரேல் விளையாடுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அது பற்றிய இறுதி முடிவை 2வது போட்டிக்கு முந்தைய மாலையில் எடுக்க உள்ளதாகவும் கோட்டக் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கடந்தப் போட்டியிலேயே ஜுரேல் 4வது இடத்தில் பேட்டிங் செய்துள்ளார். எனவே அவரும் எங்களுக்கு ஆப்ஷனாக இருக்கிறார். ஆனால் சுப்மன் கில்லின் நிலைமைப் பற்றி இறுதியாகத் தெரியாத வரை இது குறித்து பேசுவதில் பயனில்லை”

- Advertisement -

துருவ் ஜுரேலுக்கு வாய்ப்பு:

“அவரைப் பற்றிய இறுதி நிலவரம் தெரிய வந்த பின் 2வது போடிக்கான பிட்ச்சை பார்த்து விட்டு அதற்குத் தகுந்த அணியைத் தேர்ந்தெடுப்போம். சுப்மன் கில்லை நேற்று நான் நேரில் பார்த்து பேசினேன். அவர் நன்றாக குணமடைந்து வருகிறார். எனவே 4வது இடத்தில் விளையாடுவது யார் என்பது பற்றிய இறுதி முடிவை நாளை மாலை எடுக்க உள்ளோம்”

இதையும் படிங்க: இன்னும் 3வது பவுலரை கண்டுபிடிக்காத இந்தியா.. இப்படியே போனா 2027 ஃபைனல் போறது கஷ்டம்.. உத்தப்பா

“ஏனெனில் சுப்மன் கில் முழுமையாக குணமடைந்து விட்டாரா என்பதை மருத்துவர்கள் தான் முடிவு செய்வார்கள். ஒருவேளை அவர் முழுமையாக குணமடைந்திருந்தாலும் கூட விளையாடிக் கொண்டிருக்கும் போது மீண்டும் பிடிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சந்தேகம் இருந்தால் கில் மீண்டும் ஒரு போட்டியில் ஓய்வெடுப்பார். கேப்டனாக இருக்கும் கில் போன்றவரை எந்த அணியும் மிஸ் செய்யும்” என்று கூறினார்.

Advertisement