இந்தியாவில் கம்பீரை மட்டும் திட்டுறவங்க.. வெளிநாட்டில் இப்படி நடப்பதையும் பாக்கனும்.. கோட்டக் பதிலடி

Sitanshu Kotak
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 30 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அந்தத் தோல்விக்கு கொல்கத்தாவில் அமைக்கப்பட்டிருந்த சுழலுக்கு சாதகமான பிட்ச் முக்கிய காரணமாக அமைந்தது. ஆனால் தாங்கள் தான் கொல்கத்தாவில் அப்படிப்பட்ட பிட்ச் வேண்டுமென்று கேட்டு வாங்கியதாக இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்தார்.

இருப்பினும் அந்த பிட்ச்சில் இந்திய அணி நன்றாக விளையாடாதது தோல்வியைக் கொடுத்ததாக கம்பீர் சொன்னது பெரும்பாலான இந்திய ரசிகர்களை கோபமடைய வைத்தது. ஏனெனில் சுழலுக்கு சாதகமாக பிட்ச்களே கடந்த வருடம் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா ஒயிட்வாஸ் தோல்வியை சந்திக்கவும் முக்கிய காரணமானது. ஆனால் அதிலிருந்து பாடத்தைக் கற்காமல் மீண்டும் அதே தவறை செய்த கம்பீர் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

- Advertisement -

இந்தியாவில் மட்டும்:

இந்நிலையில் வெளிநாட்டு அணிகள் தங்கள் ஊரில் வேகப்பந்து வீச்சாளர்களை வைத்து எதிரணிகளை தோற்கடிப்பதற்காக வேகத்துக்கு சாதகமான பிட்ச்களை அமைப்பதாக இந்தியாவின் பேட்டிங் பயிற்சியாளர் சித்தான்சு கோட்டக் தெரிவித்துள்ளார். அதனால் 2025 சிட்னி போட்டி உட்பட வெளிநாடுகளிலும் நிறைய போட்டிகள் 3 நாட்களுக்குள் முடிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் அப்போதெல்லாம் மோசமாக விமர்சிக்காதவர்கள் இந்தியாவையும் கம்பீரையும் மட்டும் விமர்சிப்பதாக கோட்டக் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “மற்ற நாடுகள் தங்களது பலத்திற்கு தகுந்தார் போல விளையாடுவது போல, நாங்களும் இந்தியாவில் விளையாடும் போது சுழலை சார்ந்திருக்கிறோம். பெரும்பாலான போட்டிகள் சுழலின் உதவியுடன் 4 – 4.5 நாட்கள் வரை செல்லும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்”

- Advertisement -

கம்பீரை மட்டும் குறை சொல்லாதீங்க:

“முதல் 2 நாட்கள் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆட்டத்தில் இருப்பார்கள். ஆனால் கடந்தப் போட்டியில் நடந்தது எதிர்பாராத ஒன்றாகும். முதல் நாளுக்குப் பின் பிட்ச் இடியத் துவங்கியது. அதை க்யூரேட்டர் கூட விரும்ப மாட்டார். அங்கே எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகம் சுழல் வந்தது. அது போன்ற சூழ்நிலைகளில் அசத்துவதற்கு உங்களுடைய ஃபுட்வொர்க் நன்றாக இருப்பது முக்கியம். லென்த்தை நன்றாகப் பிடித்தால் உங்களால் முன்னோக்கியும் பின்னோக்கியும் எங்கே வேண்டுமானாலும் சென்று விளையாடலாம்”

இதையும் படிங்க: இதை நிரூப்பிச்ச ஷமியிடம் போன் பண்ணி கேட்டா குறைஞ்சு போவீங்களா? அதானே உங்க வேலை.. திவாரி

“அதிகப்படியாக தற்காப்புடன் விளையாடுவது உங்களை அவுட்டாக்கும். ஏனெனில் பவுலர்கள் ஒரே இடத்தில் பந்தை போடுவார்கள். தோல்வியைக் கண்டதால் கம்பீரை விமர்சிப்பவர்கள் வீரர்கள் மற்றும் என்னைப் போன்ற பேட்டிங் பயிற்சியாளரைப் பற்றி பேசுவதில்லை. தோல்விக்கு கம்பீரை மட்டும் பொறுப்பாக்குவது மோசமானது. நாங்கள் போட்டிக்கு முன் ஆலோசனைகள் மட்டுமே சொல்வோம். களத்தில் விளையாடுபவர்கள் தான் ரிஸ்க் எடுத்து பிசியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அவற்றையும் நாம் பேச வேண்டும்” என்று கூறினார்.

Advertisement