இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்று முடிந்த ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 5 போட்டிகளிலும் ஓய்வின்றி விளையாடியது மட்டுமின்றி இந்த தொடர் முழுவதுமே 185 ஓவர்களை வீசி 23 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியின் நல்ல நிலைக்கு காரணமாக திகழ்ந்தார். இந்த தொடரில் நட்சத்திர வீரரான பும்ரா 2 போட்டிகளில் ஓய்வு எடுத்துக் கொண்டபோது இந்திய அணியின் பவுலிங் யூனிட்டை வெகு சிறப்பாக தலைமை தாங்கி வழிநடத்தினார்.
விராட் கோலி தான் சிராஜுக்கு உதவி செய்தார் : சிராஜ் சகோதரர் பேட்டி
டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரை பணிச்சுமையை காரணம் காட்டாமல், எந்த ஒரு குறையும் சொல்லாமல் எத்தனை ஓவர்கள் கொண்ட ஸ்பெல்லாக இருந்தாலும் சலிக்காமல் வீசும் வீரராக முகமது சிராஜ் இருந்து வருவது பலரது மாத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது. மேலும் இதுவரை காயம் ஏற்படாமல் அவர் தொடர்ந்து விளையாடி வருவதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் முகமது சிராஜ் தொடர்ந்து இப்படி பணிச்சுமையை கருத்தில் கொள்ளாமல் முழு உடற்தகுதியுடன் பந்துவீச என்ன காரணம்? என்பது குறித்து முகமது சிராஜின் சகோதரரான இஸ்மாயில் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் அவர் கூறியதாவது : எங்களுடைய தந்தை சிராஜ் இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாட வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
அவரின் ஆசையை நிறைவேற்றும் வகையில் தற்போது சிராஜ் இந்திய அணிக்காக தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். தற்போது இந்திய அணியின் நட்சத்திர வீரராக மாறியுள்ள சிராஜ் உடற்தகுதியில் இப்படி ஒரு கட்டுக்கோப்புடன் இருக்க காரணமே விராட் கோலி தான். ஏனெனில் விராட் கோலியிடம் இருந்து அவர் கோபம் மற்றும் வெற்றிக்கான வெறி ஆகியவற்றை மற்றும் கற்றுக் கொள்ளவில்லை.
உடற்தகுதியில் எவ்வாறு இருக்க வேண்டும்? என்பது குறித்த பிட்னஸ் ஆலோசனைகளையும் விராட் கோலியிடம் இருந்து தான் பெற்றுக்கொண்டார். கடந்து 2018-ஆம் ஆண்டு சிராஜுக்கு மோசமான ஐபிஎல் தொடர் இருந்தது. அதன்பிறகு சிராஜின் திறனை கவனித்த விராட் கோலி அவரை ஆதரித்து ஆர்.சி.பி அணியில் வாய்ப்பு வழங்கியதோடு இந்திய அணிக்கும் கொண்டு வந்தார்.
இதையும் படிங்க : 5க்கு 5 தோல்வி.. ஜெய்ஸ்வால் ரூபத்தில் வாழ்க்கை ஒரு வட்டம்யா.. அதிர்ஷ்டம் இல்லாமலேயே சாதித்த இந்தியா
எனவே முகமது சிராஜ்க்கு எப்போதுமே விராட் கோலி மூத்த சகோதரர் போன்றவர். அவரிடம் இருந்து பெற்ற ஆலோசனைகளை தான் சிராஜ் கையாள்கிறார். அதோடு விராட் கோலியின் வேண்டுகோளுக்கு இணங்க முஹமது சிராஜ் நொறுக்கு தீனிகள், பிரியாணி போன்றவற்றை அறவே தவிர்த்து விட்டார் என்றும் அவரது பிட்னஸ் குறித்து சகோதரர் இஸ்மாயில் கூறியது குறிப்பிடத்தக்கது.



