இங்கிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அத்தொடருக்கு முன்பாக ரோஹித், விராட் கோலி உள்ளிட்ட சீனியர்கள் ஓய்வு பெற்றார்கள். அதனால் 3 – 1 என்ற கணக்கில் தலைமையிலான இளம் இந்திய அணி இங்கிலாந்தில் தோல்வியில் சந்திக்கும் என்று பலரும் கணித்தார்கள்.
ஆனால் முதல் போட்டியிலேயே வரலாற்றில் முதல் முறையாக 5 சதங்கள் அடித்து இந்திய அணி அட்டகாசம் செய்தது. இருப்பினும் அந்த போட்டியில் 7 கேட்ச்கள் தவற விட்டதால் இந்திய அணி பரிதாபமாக தோற்றது. குறிப்பாக ஜெய்ஸ்வால் மட்டும் 4 கேட்ச்கள் தவற விட்டது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதன் காரணமாக ஜெய்ஸ்வாலை இந்திய ரசிகர்களே கடுமையாக திட்டி தீர்த்தத்தை மறக்க முடியாது.
கேட்ச்களால் மாறிய தொடர்:
இருப்பினும் அதற்கெல்லாம் அசராத இந்தியா அடுத்த போட்டியிலேயே 336 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்து வெளிநாட்டு மண்ணில் தங்களுடைய மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. 3வது போட்டியில் மிகவும் போராடிய இந்தியா 22 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. 4வது போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து தப்பிய இந்தியா போராடி டிரா செய்தது.
கடைசி போட்டியில் 2வது இன்னிங்ஸில் 23 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடி இந்தியாவுக்கு ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடினார். அந்த அதிரடியான ஆட்டத்தில் அவர் 3 கேட்ச்களை கொடுத்தார். ஆனால் அதை ஹாரி ப்ரூக், ஜாக் கிராவ்லி ஆகியோர் தவற விட்டார்கள். அதைப் பயன்படுத்திய ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடி சதத்தை அடித்து 118 ரன்கள் விளாசினார்.
அதிர்ஷ்டம் இல்லாமலேயே:
இறுதியில் ஜடேஜா 53, சுந்தர் 53, ஆகாஷ் தீப் 66 ரன்கள் அடித்த உதவியுடன் இந்தியா 374 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதைத் துரத்திய இங்கிலாந்து ஹாரி ப்ரூக் 111, ரூட் 105 ரன்கள் எடுத்த உதவியுடன் வெற்றியை நெருங்கியதால் இந்தியா தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நாளில் நெருப்பாக செயல்பட்ட இந்திய அணி இங்கிலாந்தை தோற்கடித்து 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2 – 2 (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது.
அந்தப் போட்டியில் இந்தியா வென்றதற்கு பல காரணங்கள் இருக்கிறது. ஆனால் இங்கிலாந்து கையில் வைத்திருந்த வெற்றியைக் கோட்டை விடுவதற்கு ஜெய்ஸ்வால், ஆகாஷ் தீப் கொடுத்த 5 கேட்ச்கள் தவற விட்டது முக்கிய காரணமானது. உண்மையில் யாரும் வேண்டுமென்று கேட்ச்களை தவற விட மாட்டார்கள். ஆனால் முதல் போட்டியில் 4 கேட்ச்களை தவற விட்ட ஜெய்ஸ்வால் இந்தியாவின் தோல்விக்கு காரணமானார். அதே ஜெய்ஸ்வால் 5வது போட்டியில் இங்கிலாந்து 3 கேட்ச்களை தவற விட்டதால் கிடைத்த அதிர்ஷ்டத்தை வைத்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
இதையும் படிங்க: ஓவல் டெஸ்ட் முடிந்த கையோடு வீரர்களிடம் இருந்து கையொப்பம் வாங்கிய சுப்மன் கில்.. எதற்கு தெரியுமா?
அது வாழ்க்கை ஒரு வட்டம் என்று சொல்வதற்கு எடுத்துக்காட்டாக அமைவதாக இருக்கிறது. அது போக இத்தொடரின் 5 போட்டிகளிலும் இந்தியா டாஸ் வீசுவதில் தோல்வியை சந்தித்தது. ஆனால் டாஸ் அதிர்ஷ்டம் இல்லாவிட்டாலும் திறமை மற்றும் விடாமுயற்சியுடன் இந்தியா போராடி தொடரை சமன் செய்து சாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



