ஓவல் டெஸ்ட் முடிந்த கையோடு வீரர்களிடம் இருந்து கையொப்பம் வாங்கிய சுப்மன் கில்.. எதற்கு தெரியுமா?

Shubman Gill
- Advertisement -

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அனுபவ வீரரான விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். அதனை தொடர்ந்து இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக இளம் வீரர் சுப்மன் கில் அறிவிக்கப்பட்டார். அப்படி அவர் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு விவாதங்கள் அவரது கேப்டன்சியின் மீது தொடர்ந்து வந்தன.

இந்திய வீரர்களிடம் ஆட்டோகிராப் வாங்கிய கேப்டன் கில் :

அதனால் இந்த இங்கிலாந்து தொடரை எவ்வாறு இந்திய அணி எதிர்கொள்ளப்போகிறது? என்பது குறித்து எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. அந்த வகையில் தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துள்ள இந்திய அணியானது அங்கு நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்து அசத்தியுள்ளது.

- Advertisement -

அதிலும் குறிப்பாக கேப்டன் சுப்மன் கில் பேட்டிங்கில் மிகச் சிறப்பான ஃபார்மை இந்த தொடரில் வெளிக்காட்டியிருந்தார். மொத்தமாக 10 இன்னிங்ஸ்களில் விளையாடிய அவர் 75 ரன்கள் சராசரியுடன் 754 ரன்களை குவித்தது மட்டுமின்றி ஒரு இரட்டை சதம் உட்பட நான்கு சதங்களை இந்த தொடரில் அடித்து அசத்தியிருந்தார்.

பேட்ஸ்மேனாக மட்டுமின்றி ஒரு கேப்டனாகவும் இந்த தொடரில் சுப்மன் கில்லின் செயல்பாடு திருப்திகரமாக இருந்ததால் அவர் நிச்சயம் நல்ல ஒரு கேப்டனாக மாறுவார் என்ற நம்பிக்கையும் அனைவரது மத்தியிலும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக கடைசியாக நடைபெற்ற ஓவல் டெஸ்ட் போட்டியில் பெற்ற வெற்றிக்கு பிறகு இந்திய வீரர்கள் அனைவரிடமும் தனது டீ ஷர்ட்டில் கையெழுத்து வாங்கி ஒரு நெகிழ்ச்சியான செயலை கேப்டன் சுப்மன் கில் செய்துள்ளார்.

- Advertisement -

இப்படி வீரர்களிடம் அவர் கையெழுத்து வாங்க காரணம் யாதெனில் : இதுதான் அவருக்கு கேப்டனாக முதல் டெஸ்ட் தொடர். அதுமட்டுமின்றி வெளிநாட்டில் நடந்த இந்த சவாலான தொடரில் இந்திய அணி இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் தொடரை சமன் செய்து வரலாறு நிகழ்த்தியதால் இந்த தொடரில் இடம் பெற்றிருந்த அனைத்து வீரர்களிடமும் கையெழுத்து வாங்க விரும்பியுள்ளார்.

இதையும் படிங்க : இப்படி ஒரு மேட்சை அருகில் பாத்தது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.. அம்பயர் குமார் தர்மசேனா – பகிர்ந்த கருத்து

அதுமட்டும் இன்றி இதுதான் சிறந்த இந்திய அணி என்று அந்த புகைப்படத்தினை சமூக வலைதளத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார். இப்படி ஒரு அணியாக இருந்தால் தான் நம்மால் வெற்றிபெற முடியும் என்று ஒரு கேப்டனே சென்று வீரர்களிடம் கையெழுத்தினை வாங்கி அவர்களை பாராட்டியது சிறப்பான ஒரு செயல் என்று கூறலாம்.

Advertisement