என் தந்தையை இழந்தபிறகு ரவி சாஸ்திரி என்னிடம் கூறியது அப்படியே பலித்தது – சிராஜ் பகிர்ந்த தகவல்

Siraj-1
- Advertisement -

இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் தற்போது நம்பிக்கைக்குரியவராக இந்திய அணியில் மாறியுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணியில் அறிமுகமான முகமது சிராஜ் அறிமுக போட்டியிலேயே வில்லியம்சன் விக்கெட்டை கைப்பற்றி இருந்தாலும் அதிக அளவு ரன்களை வாரி வழங்கி இருந்தார். இதன் காரணமாக 3 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்த நிலையில் அவர் இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதனை தொடர்ந்து மீண்டும் ஐபிஎல் தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 2019ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார்.

siraj 2

- Advertisement -

ஆனால் அந்த போட்டியிலும் அவர் சோபிக்காத காரணமாக அந்த ஒரே ஒரு ஒருநாள் போட்டியுடன் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இருப்பினும் தனது விடா முயற்சியின் காரணமாக தொடர்ந்து பெங்களூரு அணியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி கடந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் வேகப்பந்து வீச்சாளராக தேர்வானார். அந்தத் தொடரின் போது அறிமுகமான சிராஜ் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் இல்லாமல் இருந்த அவ்வேளையில் இந்திய அணியை பவுலிங்கில் தலைமை தாங்கி வழிநடத்தி சிறப்பாக விளையாடினார்.

இந்த ஆஸ்திரேலிய தொடரில் மட்டும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் 13 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர் என்றும் பெயரெடுத்தார். அறிமுகமான சில ஆண்டுகளில் ரன்களை வாரி இறைத்தும் விக்கெட்டுகளை கைப்பற்றாமல் மோசமான பவுலர் என்று பெயரெடுத்த சிராஜ் தனது கடின உழைப்பின் மூலமாக தொடர்ந்து சிறப்பாக பந்துவீசி தற்போது இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் மாறியுள்ளார்.

Siraj 1

இந்நிலையில் தற்போது தான் சாதித்த அந்த ஆஸ்திரேலிய தொடரில் தந்தையை இழந்து அனுபவித்த வேதனையை பற்றியும் அப்போது ரவிசாஸ்திரி அவருக்கு அளித்த உத்வேகமான வார்த்தைகள் குறித்தும் தனது பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ஆஸ்திரேலிய அணிக்கு நான் தேர்வான போது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. நான் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து ஆஸ்திரேலியா பயணித்த பிறகு எனது தந்தை இறந்துவிட்டார் என்ற செய்தி எனக்கு கிடைத்தது.

- Advertisement -

அதனை கேட்டு நான் மிகவும் உடைந்து போனேன். மனதளவில் மிகுந்த கஷ்டத்துடன் எனது அறையில் அழுது கொண்டிருந்தேன். அப்போது இந்திய அணியின் கேப்டன் கோலி, ரவி சாஸ்திரி, மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருண் ஆகியோர் எனக்கு அந்த இக்கட்டான வேளையில் மிக உறுதுணையாக இருந்தனர். குறிப்பாக ரவிசாஸ்திரி என்னிடம் வந்து “நீ நிச்சயம் இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடுவாய்”, “அத்துடன் நீ விளையாடும் போட்டியில் உனது தந்தையின் ஆசீர்வாதத்தோடு நீ 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதிப்பாய்” என வாழ்த்துக் கூறினார்.

siraj 2

அவர் கூறியது போலவே நான் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி “காபா” டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினேன் என்று சிராஜ் கூறியுள்ளார். சிராஜ் பற்றி பல விமர்சனங்கள் இருந்தாலும் அவருக்கு இந்திய அணி கேப்டன் விராத் கோலி மற்றும் ரவி சாஸ்திரி தொடர்ந்து ஆதரவளித்து வந்தனர். தற்போது படிப்படியாக முன்னேறி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடும் அளவிற்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement