இரண்டாவது இன்னிங்சில் நான் 5 விக்கெட்டுகளை வீழ்த்த இந்த ஒரு போன் கால் தான் காரணம் – சிராஜ் நெகிழ்ச்சி

Siraj
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் தேர்வானவர் இளம்வீரர் சிராஜ். முதல் போட்டியில் அணியில் வாய்ப்பு கிடைக்காத இவருக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான காயம் அடைந்து வெளியேறிய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு பதிலாக 2 ஆவது டெஸ்ட் போட்டியின் போது அவர் இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்தது. இந்திய அணிக்காக அறிமுகமானதிலிருந்து தற்போது வரை சிறப்பாக பவுலிங் செய்து வரும் முகமது சிராஜ் தனது மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தற்போது விளையாடி வருகிறார்.

siraj 2

- Advertisement -

அவரது மூன்றாவது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சிராஜ் ஆஸ்திரேலிய அணியின் பலமான பேட்டிங் அசைத்து பார்த்துள்ளார். அண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக சிறப்பாக பந்துவீசிய இவர் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரில் தேர்வான சில நாட்களிலேயே அவர் அப்பா ஹைதராபாத்தில் மரணமடைந்தார்.

இருப்பினும் அவர் அவரது தந்தையின் இறுதிச்சடங்கிற்கு கூட செல்லாமல் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற தனது தந்தையின் ஆசைக்காக ஆஸ்திரேலியாவில் தங்கி தனது அப்பாவின் ஆசையை நிறைவேற்றும் வகையில் நான் விளையாடுவதுதான் என்றும் இந்திய அணிக்காக வெற்றியை பெற்று தந்து அவருக்கு அஞ்சலி செலுத்துவேன் என்றும் அவர் சபதம் செய்திருந்தார். இந்நிலையில் தற்போது இந்தியா ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்து வீசி அவர் இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியின் சரிவிற்கு முக்கிய காரணமாக இருந்தார்.

Siraj-1

இந்நிலையில் இந்த போட்டி முடிந்த பின்னர்தான் 5 விக்கெட்டை வீழ்த்தியதற்கு நம்பிக்கை கொடுத்தது ஒரு போன்கால் என்றும் அது யார் செய்தது என்றும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியில் இணைந்த பின்னர் என் அப்பாவின் மரணச் செய்தியைக் கேட்டு நான் மனதளவில் நொருங்கினேன். மேலும் எனது ஆட்டத்தின் மீது கவனம் செலுத்த முடியுமா ? என்ற சந்தேகமும் எழுந்தது. நான் அந்த அளவிற்கு கஷ்டத்தில் இருந்தேன். அப்போது இந்தியா திரும்ப கூட நான் யோசித்துக் கொண்டிருந்தேன்.

Siraj 1

ஆனால் அதன் பிறகு என் அம்மா என்னிடம் போனில் பேசினார். அவர் கொடுத்த நம்பிக்கை மற்றும் இந்திய அணிக்காக ஆடவேண்டும் என்று என் குடும்பத்தாரின் ஆசை எல்லாம் என் முடிவை மாற்ற செய்தது. என் அம்மா எனக்கு மனரீதியான நம்பிக்கை கொடுத்தார். அதன் பின்னரே நான் விளையாட வேண்டும் என்றும் சாதிக்க வேண்டும் என்றும் உறுதியாக இருந்தேன். என் அம்மா கொடுத்த மனரீதியான நம்பிக்கை காரணமாகவே நான் சிறப்பாக பந்துவீசி இந்த போட்டியில் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளேன் என்று சிராஜ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement