IND vs WI : நான் மட்டும் அல்ல எல்லோருமே அவர்மேல நம்பிக்கையா இருந்தோம் – த்ரில் வெற்றி குறித்து பேசிய சிராஜ்

Siraj-and-Axar-Patel
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 312 ரன்கள் என்கிற சவாலான இலக்கினை வெற்றிகரமாக சேசிங் செய்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணியானது மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதனைத் தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.

Axar Patel

- Advertisement -

இந்த முக்கியமான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவை என்ற போது களத்தில் இருந்த முகமது சிராஜ் தற்போது அக்சர் பட்டேல் விளையாடிய விதம் குறித்து போட்டி முடிந்து பிசிசிஐக்கு அளித்த பேட்டியில் தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் பிசிசிஐ வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் இந்திய அணி வெற்றி பெற்ற பிறகு கொண்டாடிய விதம் குறித்து காண்பிக்கப்பட்டது.

மேலும் அந்த வீடியோவில் முகமது சிராஜ் அக்சர் பட்டேலின் பேட்டிங் குறித்தும் சில கருத்துக்களை அதில் பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில் : அந்த முக்கியமான கடைசி ஓவரின் போது எங்களுடைய எமோஷன் நிறையவே இருந்தது. ஆனால் அக்சர் பட்டேலால் நிச்சயம் சிக்ஸர் அடித்து போட்டியை வெற்றி பெற்று தர முடியும் என்று நான் நம்பினேன்.

Axar Patel IND vs WI

நான் மட்டுமின்றி ஓய்வறையில் இருந்த இந்திய வீரர்கள் முதல் நிர்வாகத்தினர் வரை அனைவருமே அக்சர் படேல் சிக்ஸர் அடிப்பார் என்று அவர் மீது முழு நம்பிக்கை வைத்திருந்தனர். அதை பூர்த்தி செய்யும் வகையில் அக்சர் பட்டேலும் முதல் மூன்று பந்துகளில் பொறுமையாக சிங்கிள் ஆடிவிட்டு அதன் பின்னர் போட்டியை சிக்சருடன் முடித்துக் கொடுத்தார் என சிராஜ் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயித்த 312 ரன்கள் என்கிற இலக்கினை துரத்திய இந்திய அணியானது ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக வெற்றி பெற்றது.

இதையும் படிங்க : ஒருநாள் போட்டிகளை புதுப்பிக்க அதை தாராளமாக செய்யலாம் – பாக் வீரரை ஆதரித்த ரவி சாஸ்திரி

இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் அரைசதம் கடந்து ஆட்டம் இழந்தாலும் இறுதி நேரத்தில் ஏழாவது வீரராக களமிறங்கிய அக்சர் பட்டேல் 35 பந்துகளை சந்தித்த வேளையில் 3 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் என அட்டகாசமாக விளையாடி 64 ரன்கள் குவித்து இறுதிவரை களத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement