வாய் மீது விரல் வைத்து நான் விக்கெட்டை கொண்டாட இதுவே காரணம் – ரகசியத்தை பகிர்ந்த சிராஜ்

Siraj

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி டிராவில் முடிவடைந்தத நிலையில் இவ்விரு அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான சிராஜ் முதல் இன்னிங்சில் 94 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

siraj

கடந்த ஆஸ்திரேலிய தொடரின் போது டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு அறிமுகமான சிராஜ் தனது சிறப்பான பந்துவீச்சை அந்த தொடரில் வெளிப்படுத்தியதால் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் தேர்வானார். முதல் டெஸ்ட் போட்டியிலேயே தனது பந்துவீச்சில் அசத்திய சிராஜ் இந்த 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக இந்த இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்து வீரர்களை விக்கெட் வீழ்த்தி வழியனுப்பும் போதெல்லாம் அவரின் வாய் மீது விரலை வைத்து பேட்ஸ்மேன்களை வழியனுப்பும் விதம் சற்று ஆக்ரோஷமாக காணப்பட்டது. இது குறித்து ஏற்கனவே தினேஷ் கார்த்திக்கும் விமர்சித்து இருந்த நிலையில் தற்போது தான் ஏன் அவ்வாறு விக்கெட்டை கொண்டாடுகிறேன் என்பது குறித்து தற்போது சிராஜ் பதில் அளித்துள்ளார். இதுகுறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறுகையில் :

siraj 1

ஒரு வேகப்பந்து வீச்சாளராக இந்திய அணிக்காக பங்களிப்பை வழங்க வேண்டிய பொறுப்பு என்னிடம் உள்ளது. நான் இப்படி விக்கெட்டை கொண்டாடுவதற்கு காரணம் யாதெனில் என்னை விமர்சித்தவர்களுக்கும், என்னை வெறுப்பவர்களுக்காக மட்டும்தான். ஏனெனில் சிராஜ் இதை செய்ய முடியாது அவரால் விக்கெட்டை வீழ்த்துவது கடினம் என்று கூறுபவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே நான் இதுபோன்று விக்கெட்டை கொண்டாடுகிறேன். எனது பந்துவீச்சின் மூலம் விமர்சகர்களுக்கு பதில் அளிக்க வேண்டும் என்பதற்காகத்தான் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் இந்த கொண்டாட்டத்தில் ஈடுபடுகிறேன் என முகமது சிராஜ் கூறியுள்ளார்.

- Advertisement -

siraj

தற்போது நடைபெற்று வரும் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனது சிறப்பான பந்துவீச்சை முதல் இன்னிங்ஸில் வெளிப்படுத்திய சிராஜ் இரண்டாவது இன்னிங்சிலும் தனது பந்து வீச்சால் இங்கிலாந்து அணியை அச்சுறுத்துவார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement