- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அன்னைக்கு அஷ்வின்.. இன்னைக்கு நிதீஷ் ரெட்டி.. ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்ற – முகமது சிராஜ்

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் நடப்பு பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியில் விளையாடும் இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்சில் தற்போது மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் குவித்துள்ளது. அதேவேளையில் ஆஸ்திரேலிய அணி தங்களது முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்துள்ளது.

நிதீஷ் ரெட்டியின் சதத்திற்கு உதவிய முகமது சிராஜ் :

இதன் காரணமாக 116 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் நாளைய நான்காம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி தொடர்ந்து விளையாட இருக்கிறது. இந்த போட்டியின் போது ஒரு கட்டத்தில் இந்திய அணி 221 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய வேளையில் நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரது ஜோடி அற்புதமான பார்ட்னர்ஷிப் அமைத்தது.

- Advertisement -

எட்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அவர்கள் 127 ரன்கள் குவித்து இந்திய அணியை ஃபாலோ ஆனில் இருந்து மீட்டது மட்டுமின்றி ஓரளவு டீசன்டான ரன் குவிப்பிற்கு அழைத்துச் சென்றனர். இந்த போட்டியின் போது ஒரு கட்டத்தில் நிதீஷ்குமார் ரெட்டி சதத்தை நெருங்கிய வேளையில் வாஷிங்டன் சுந்தர் 50 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதற்கடுத்த ஓவரில் ஜஸ்ப்ரீத் பும்ராவும் டக் அவுட்டானதால் நிதீஷ் ரெட்டி சதத்தை பூர்த்தி செய்வாரா? என்று எதிர்பார்ப்பு இருந்தது. அவ்வேளையில் களத்திற்குள் வந்த முகமது சிராஜ் ஆஸ்திரேலிய பவுலர்களை நேர்த்தியாக எதிர்கொண்டு அவர் சதமடிக்க உதவினார்.

- Advertisement -

கடந்த சில தொடர்களுக்கு முன்னர் சென்னை டெஸ்ட் போட்டியின் போது அஸ்வின் எவ்வாறு சதத்தை நெருங்கிய வேளையில் கடைசி விக்கெட்டாக களமிறங்கி போட்டியின் அழுத்தத்தை சுதாரித்து அஸ்வினை சதம் அடிக்க உதவினாரோ அதேபோன்று இந்த போட்டியில் நிதீஷ் ரெட்டி 99 ரன்களில் இருந்த போது ஆஸ்திரேலியா பவுலர்களை சுதாரித்து நிதீஷ் ரெட்டி சதம் அடிக்க உதவியுள்ளார்.

இதையும் படிங்க : சேவாக், முரளி விஜய்யை முந்தி அசத்தலான சாதனையை நிகழ்த்திய நிதீஷ் ரெட்டி – விவரம் இதோ

மேலும் அஸ்வின் சென்னை மைதானத்தில் சதம் அடிக்கையில் எவ்வாறு அவர் கொண்டாடினாரோ அதேபோன்று நிதீஷ்குமார் ரெட்டியும் மெல்போர்ன் மைதானத்தில் சதம் அடித்த போதும் அவர் மகிழ்ச்சியுடன் அந்த சதத்தை கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -