ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் அறிமுகமான நிதிஷ் ரெட்டி இதுவரை நடைபெற்று முடிந்த மூன்று போட்டியிலும் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இவ்வேளையில் தற்போது நடைபெற்று வரும் “பாக்சிங் டே” போட்டியிலும் அவர் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
சேவாக், முரளி விஜய்யை கடந்த நிதீஷ் ரெட்டி :
அந்த வகையில் நடைபெற்று வரும் இந்த நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணியானது 474 ரன்கள் குவித்தது. பின்னர் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் இந்திய அணியானது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அவ்வேளையில் நிதீஷ் குமார் ரெட்டி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை ஓரளவுக்கு கரை சேர்த்துள்ளார் என்று கூறலாம். இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 176 பந்துகளை சந்தித்த அவர் 10 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 105 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இன்னும் ஒரு விக்கெட் மட்டுமே எஞ்சியுள்ள வேளையில் நாளையும் அவர் அதிரடி காட்டுவார் என்று தெரிகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கெதிராக நடைபெற்று வரும் இந்த தொடரில் அவர் இந்திய அணியின் முன்னாள் வீரர்களான சேவாக் மற்றும் முரளி விஜய் ஆகியோரை கடந்து சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
அந்த வகையில் கடந்து 2003-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் சேவாக் 6 சிக்ஸர்களை விளாசியிருந்தார். அதேபோன்று கடந்த 2014-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாலில் நடந்த டெஸ்ட் தொடரில் இந்திய வீரர் முரளி விஜய் 6 சிக்ஸர்களை அடித்திருந்தார்.
இதையும் படிங்க : வரலாறு படைச்சுட்டிங்க.. அவரோட தியாகத்தை மறக்காம இதை செஞ்சா பெரிய ஸ்டாரா வருவீங்க.. கவாஸ்கர் அறிவுரை
இப்படி ஆஸ்திரேலிய நாட்டில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் தொடரில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர்களாக இவர்கள் இருவருமே முதலிடத்தில் இருந்தனர். இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் தொடரில் 4 போட்டியில் இதுவரை 8 சிக்ஸர்களை அடித்து அவர்கள் இருவரது சாதனையையும் அவர் முறியடித்துள்ளார்.



