இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது அண்மையில் நடைபெற்று முடிந்தது. அந்த தொடரினை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணியானது அடுத்ததாக ரோகித் சர்மா தலைமையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி எதிராக விளையாடி வருகிறது.
அந்த வகையில் கொழும்பு நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய ஆட்டத்தினை சமனில் முடித்தது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்த வேளையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று அதே கொழும்பு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து தற்போது முதலில் விளையாடிய இலங்கை அணியானது முதலில் பேட்டிங் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்களை குவித்துள்ளது.
அதனைத்தொடர்ந்து இந்திய அணி 241 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் ஒரு முக்கிய சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் இந்த போட்டியின் போது முதல் ஓவரின் முதல் பந்திலேயே இலங்கை அணியின் துவக்க வீரரான நிசங்காவை அவுட் செய்ததன் மூலம் ஜாகிர் கான் மற்றும் பிரவீன் குமார் ஆகியோரது சாதனையை சமன் செய்துள்ளார்.
இதற்கு முன்னதாக கடந்த 2002-ஆம் ஆண்டு மற்றும் 2009-ஆம் ஆண்டு இருமுறை ஜாஹிர் கான் தனது முதல் ஓவரின் முதல் பந்திலேயே இலங்கை அணியின் துவக்க வீரர்களை ஆட்டமிழக்க வைத்துள்ளார். அதேபோன்று 2010 ஆம் ஆண்டு பிரவீன் குமார் இலங்கை அணியின் துவக்க வீரரை ஆட்டமிழக்க வைத்துள்ளார்.
இதையும் படிங்க : 1998 நண்பர்கள் தின ஸ்பெஷல்.. சூதாட்டகாரர்களை பொய்யாக்கி உலக சாதனையுடன் இந்தியாவை ஜெயிக்க வைத்த சச்சின் – கங்குலி
அதற்கு அடுத்து தற்போது மூன்றாவது இந்திய வீரராக பதும் நிசாங்காவை முகமதுராஜ் தனது முதல் பந்திலேயே ஆட்டமிழக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.



