1998 நண்பர்கள் தின ஸ்பெஷல்.. சூதாட்டகாரர்களை பொய்யாக்கி உலக சாதனையுடன் இந்தியாவை ஜெயிக்க வைத்த சச்சின் – கங்குலி

- Advertisement -

உலகம் முழுவதிலும் ஆகஸ்ட் 4ஆம் தேதி நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. ஆபத்தில் உதவுவனே சிறந்த நண்பன் என்பதற்கு அடையாளமாக இங்கே பலரும் இருக்கின்றனர். அப்படி உண்மையான நட்பை கொண்டிருக்கும் அனைவரும் இன்று நண்பர்கள் தின வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இன்றைய நாளில் ஜாம்பவான்கள் சச்சின் மற்றும் ஆகியோர் நண்பர்களாக சேர்ந்து சூதாட்டக்காரர்களின் கணிப்பை பொய்யாக்கி இந்தியாவை வெற்றி பெற வைத்த கதையை பார்ப்போம்.

இலங்கையில் கடந்த 1998ஆம் ஆண்டு நிதஹாஸ் கோப்பை முத்தரப்பு தொடர் நடைபெற்றது. அதில் நியூசிலாந்து அணியை தோற்கடித்த இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. ஆனால் அந்தப் போட்டிக்கு முன்பாக சூதாட்ட தரகர்களிடம் இந்தியா தோற்பதற்காக விளையாடுவதற்கு சச்சின் டெண்டுல்கர் மற்றும் சௌரவ் கங்குலி ஆகியோர் பணம் பெற்றாதாக செய்திகள் வெளியாகின.

- Advertisement -

சச்சின் – கங்குலி நட்பு:
மேலும் இந்திய அணியின் பயிற்சியாளரான அனுஷ்மான் கெய்க்வாட் அவர்களிடம் அடையாளம் தெரியாத நபர் தொலைபேசியில் தொடர்புகொண்டு இந்தியா தோற்கும் என்று சொன்னதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டது. அதை அறிந்த சச்சின் உடனடியாக சௌரவ் கங்குலி அறைக்குச் சென்று தங்களை பற்றி இப்படி ஒரு மோசமான செய்தி வந்துள்ளதை சொன்னார்.

அதனால் கோபமடைந்த சச்சின் மற்றும் கங்குலி ஆகிய இருவருமே சூதாட்டக்காரர்களின் கருத்தை பொய்யாக்குவதற்காக எப்படியாவது ஃபைனலில் இந்தியாவை வெற்றி பெற வைக்க வேண்டுமென முடிவெடுத்தனர். குறிப்பாக பேட்டிங்கில் விக்கெட்டை எளிதாக விடாமல் ஒவ்வொரு ஓவரின் கடைசிப் பந்திலும் ஸ்ட்ரைக்கை மாற்றி விட வேண்டும் என்று அவர்கள் முடிவெடுத்தனர்.

- Advertisement -

அந்தத் திட்டத்துடன் ஜூலை 7ஆம் தேதி கொழும்புவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு அபாரமாக விளையாடிய சச்சின் மற்றும் கங்குலி ஆகியோர் 252 ரன்கள் மெகா ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் 250 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த முதல் ஜோடி என்ற உலக சாதனையையும் அவர்கள் படைத்தனர். அதில் சச்சின் சதமடித்து 128, கங்குலி சதமடித்து 109 ரன்கள் விளாசி இந்தியா 308 ரன்களை இலக்காக நிர்ணயிக்க உதவினர்.

இதையும் படிங்க: இந்த வயசுலயும் வாய்ப்பு கிடைக்கனும்ன்னா.. அதை செய்யனும்ன்னு புரிஞ்சுகிட்டேன்.. திண்டுக்கல் கேப்டன் அஸ்வின் பேட்டி

அதை சேசிங் செய்த இலங்கைக்கு அரவிந்தா டீ சில்வா அதிரடியாக சதமடித்து 105 (94) ரன்கள் குவித்து போராடினார். ஆனால் மற்ற வீரர்களை அதிரடி காட்ட விடாத இந்தியா 49.3 ஓவரில் இலங்கையை 301 ரன்களுக்கு சுருட்டி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக அஜித் அகர்கர் 4 விக்கெட்டுகள் எடுத்தார். அந்த வகையில் தங்களை பரிசுத்தமானவர்கள் என்பதை நிரூபித்த சச்சினும் கங்குலியும் நட்புக்கு இலக்கணமாக விளையாடி இந்தியாவுக்கு 1998 நிதஹாஸ் கோப்பையின் சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தனர்.

Advertisement