இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தங்களது முதல் இன்னிங்சில் விளையாடி வந்த இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்களை மட்டுமே குவித்திருந்தது.
பென் ஸ்டோக்ஸ்ஸை வீழ்த்தி சாதனை நிகழ்த்திய முகமது சிராஜ் :
இந்நிலையில் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டம் துவங்கியதில் இருந்து இங்கிலாந்து அணியின் வீரர்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக இன்றைய போட்டி துவங்கிய இரண்டாவது ஓவரிலேயே அந்த அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் மற்றும் கேப்டன் பென் ஸ்டாக்ஸ் ஆகியோர் ஆட்டமிழந்தாலும் :
தற்போது மூன்றாம் நாள் உணவு இடைவேளை வரை இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 249 ரன்களை குவித்துள்ளது. குறிப்பாக இந்த முதல் இன்னிங்ஸில் விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் 82 பந்துகளில் 102 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். அதேபோன்று மற்றொரு நட்சத்திர வீரர் ஹாரி புரூக் 127 பந்துகளில் 91 ரன்கள் குவித்து களத்தில் உள்ளார்.
இவர்கள் இருவரும் இணைந்து 6 விக்கெட்டுக்கு 154 பந்துகளில் 165 ரன்கள் குவித்துள்ளனர். இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் பென் ஸ்டோக்ஸ்ஸை வீழ்த்தியன் மூலம் முதல் சர்வதேச வீரராக மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார்.
அதாவது கடந்து 2013-ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இதுவரை 113 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள வேளையில் யாரும் அவரை டெஸ்ட் போட்டியின் முதல் பந்தில் வீழ்த்தியதே கிடையாது.
இதையும் படிங்க : 80 பந்தில் சதம்.. ப்ரூக் அசத்தல்.. இந்தியாவை நொறுக்கி பதிலடி கொடுத்த ஸ்மித் அதிரடி சாதனை
இதுவரை அவர் 202 இன்னிங்ஸ்களில் 16 முறை அவர் டக் அவுட்டாகி இருந்தாலும் இதுவரை கோல்டன் டக் அவுட் ஆனதே கிடையாது. இந்நிலையில் பென் ஸ்டோக்ஸ்ஸை முதல் பந்திலேயே வீழ்த்தி கோல்டன் டக் அவுட் முறையில் அவரை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளராக முகமது சிராஜ் சாதனை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



