80 பந்தில் சதம்.. ப்ரூக் அசத்தல்.. இந்தியாவை நொறுக்கி பதிலடி கொடுத்த ஸ்மித் அதிரடி சாதனை

Jamie Smith
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை வகிக்கும் நிலையில் இரண்டாவது போட்டி பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. ஜூலை 2ஆம் தேதி துவங்கிய அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 587 ரன்கள் குவித்து அசத்தியது.

அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் இரட்டை சதத்தை அடித்து 269 ரன்கள் குவித்து அசத்தினார். அவருடன் வாஷிங்டன் சுந்தர் 43, ஜெய்ஸ்வால் 87, ரவீந்திர ஜடேஜா 89 ரன்களை எடுத்தார். இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக சோயா பஷீர் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அடுத்ததாக களமிறங்கிய இங்கிலாந்துக்கு பென் டக்கெட், ஓலி போப்பை அடுத்தடுத்து ஆகாஷ் தீப் டக் அவுட்டாக்கி மிரட்டினார்.

- Advertisement -

இங்கிலாந்து பதிலடி:

அதே போல ஜாக் கிராவ்லி 19 ரன்னில் சிராஜ் வேகத்தில் விக்கெட்டை இழந்ததால் 25/3 என ஆரம்பத்திலேயே இங்கிலாந்து தடுமாறியது. அப்போது நிதானமாக விளையாட முயற்சித்த ஜோ ரூட்டை 22 ரன்னில் காலி செய்த சிராஜ் அடுத்ததாக வந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸை கோல்டன் டக் அவுட்டாக்கி மிரட்டினார். அதனால் 88/5 என இங்கிலாந்து மீண்டும் தடுமாறிய போது களமிறங்கிய ஜேமி ஸ்மித் அதிரடியாக விளையாடினார்.

மறுபுறம் ஹரி ப்ரூக் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தி இந்தியாவுக்கு சவாலைக் கொடுத்தார். அதில் ஜேமி ஸ்மித் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மித் இங்கிலாந்தை சரிவிலிருந்து எடுத்தார். குறிப்பாக பிரசித் கிருஷ்ணாவுக்கு எதிராக ஒரே ஓவரில் 23 ரன்கள் அடித்த அவர் அரை சதத்தை அடித்து அசத்தினார்.

- Advertisement -

அதிரடி சாதனை சதம்:

அவருடன் சேர்ந்து விளையாடிய ப்ரூக்கும் அரை சதத்தை அடித்து இந்தியாவுக்கு மறுபுறம் சவாலைக் கொடுத்தார். தொடர்ந்து அசத்தலாக விளையாடிய அந்த ஜோடியில் ஸ்மித் 80 பந்துகளில் சதத்தை அடித்தார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக வேகமான சதத்தை அடித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

இதையும் படிங்க: அவர் செஞ்சுரி அடிக்குறத விட.. இந்த இன்னிங்ஸ் தான் பெஸ்ட்.. ரவீந்திர ஜடேஜாவின் ஆட்டம் குறித்து – ஆகாஷ் சோப்ரா பேச்சு

இதற்கு முன் 2023 ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் பென் டக்கெட் 88 பந்துகளில் இந்தியாவுக்கு எதிராக 100 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. இது போக ஒரு டெஸ்ட் போட்டியில் காலையில் களமிறங்கி உணவு இடைவெளிக்குள் சதத்தை அடித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற வரலாறு காணாத சாதனையையும் அவர் படைத்துள்ளார். அவர்களுடைய அட்டகாசமான ஆட்டத்தால் 3வது நாள் உணவு இடைவெளியில் இங்கிலாந்து 249/5 ரன்கள் எடுத்தது. களத்தில் ஸ்மித் 102*, ஹரி ப்ரூக் 91* ரன்களுடன் இந்தியாவுக்கு சவாலைக் கொடுத்து வருவதால் ரசிகர்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Advertisement