அவர் செஞ்சுரி அடிக்குறத விட.. இந்த இன்னிங்ஸ் தான் பெஸ்ட்.. ரவீந்திர ஜடேஜாவின் ஆட்டம் குறித்து – ஆகாஷ் சோப்ரா பேச்சு

Chopra and Jadeja
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தற்போது இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கடந்த ஜூலை 2-ஆம் தேதி எட்ஜ்பேஸ்டன் நகரில் துவங்கிய இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது தங்களது முதலில் 587 ரன்கள் குவித்து அசத்தியது. அதனை தொடர்ந்து விளையாடி வரும் இங்கிலாந்து அணியானது நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் :

செஞ்சுரியை விட ஜடேஜாவின் இந்த இன்னிங்ஸ் பெஸ்ட் : ஆகாஷ் சோப்ரா

3 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்கள் மட்டுமே குவித்திருந்தது. அதன் காரணமாக 510 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி விளையாட இருக்கிறது. இந்நிலையில் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் சுப்மன் கில் 269 ரன்கள் அடித்தாலும் ரவீந்திர ஜடேஜா அடித்த 89 ரன்கள் மிகச் சிறப்பான ஒரு இன்னிங்ஸ் என இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா பாராட்டியுள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : ரவீந்திர ஜடேஜா விளையாடிய இந்த இன்னிங்ஸ் அற்புதமான ஒரு இன்னிங்ஸ். ஏனெனில் ரிஷப் பண்ட், நிதீஷ்குமார் ரெட்டி என அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் விழுந்தவுடன் இந்திய அணி சரிவை நோக்கி நகர்ந்தது. ஆனால் அந்த நேரத்தில் சுப்மன் கில்லுடன் பாட்னர்ஷிப் அமைத்த ஜடேஜா இந்திய அணியை மீண்டும் ஒருமுறை மீட்டெடுத்து இருக்கிறார்.

எத்தனையோ முறை இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் இதுபோன்ற 80 ரன்களை அடித்துள்ளார். ஆனால் இந்த இன்னிங்ஸில் அவர் அடித்த 89 ரன்கள் அவர் அடிக்கும் சதத்தை விட மிகப்பெரியது. ஏனெனில் அணி சரிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும்போது சுப்மன் கில்லுடன் இணைந்து 203 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க உதவினார்.

- Advertisement -

அதுவே இந்திய அணியை 211 ரன்களில் இருந்து ஆறாவது விக்கெட்டுக்கு 414 ரன்கள் வரை கொண்டு சென்றது. எனவே ஜடேஜாவின் இந்த இன்னிங்ஸ் சதத்தை விட மிகப் பெரியது என ஆகாஷ் சோப்ரா பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இங்கிருந்து இங்கிலாந்து அணி ஜெயிக்க வாய்ப்பே இல்ல.. எட்ஜ்பேஸ்டன் டெஸ்ட் குறித்து பேசிய – ஆகாஷ் சோப்ரா

ஏற்கனவே இதே எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சதம் அடித்து அசத்தியிருந்த ஜடேஜா மீண்டும் ஒருமுறை நேற்று சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 89 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜாஷ் டங் வீசிய பவுன்சர் பந்தில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டு வெளியேறியது ரசிகர் மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்தது. இருந்தாலும் அவரது இந்த மிகச்சிறப்பான இன்னிங்ஸ் இந்திய அணியை மீட்டெடுத்ததால் அவரது இந்த ஆட்டத்திற்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

Advertisement