ஆண்டர்சன் மீதிருந்த கோவத்தை பேர்ஸ்டோ-விடம் காண்பித்த சிராஜ் – மைதானத்தில் நடந்தது என்ன ?

Siraj-1
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 4ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி ஆனது 183 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முதல் இன்னிங்சில் அதிக பட்சமாக ஜோ ரூட் 64 ரன்களையும், இந்திய அணி சார்பாக பும்ரா நான்கு விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார்.

indvseng

- Advertisement -

அதனைத் தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 278 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ராகுல் 84 ரன்களையும் ஜடேஜா 56 ரன்களையும் குவித்தனர். அதன்பிறகு 96 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து அணி 303 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் காரணமாக 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது இந்திய அணி விளையாடி வருகின்றது.

நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஆனது 52 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட்டை இழந்துள்ளது. மேலும் 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தற்போது இந்திய அணி விளையாடி வருவதால் இந்த போட்டியில் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான சிராஜ் இங்கிலாந்து வீரரான ஜானி பேர்ஸ்டோவை இரண்டாவது இன்னிங்சில் ஆட்டம் இழக்க வைத்த போது சற்று ஆவேசமாக அந்த விக்கெட்டை கொண்டாடினார்.

siraj

ஏனெனில் ஏற்கனவே முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து கொண்டிருந்த சிராஜை இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரான ஆண்டர்சன் சீண்டியது மட்டுமின்றி அவர் மீது உரசியும் சென்றார். இதன் காரணமாக இரண்டாவது இன்னிங்சில் தனது கோபத்தை பந்து வீச்சில் வெளிப்படுத்திய சிராஜ் இங்கிலாந்து வீரர்களுக்கு எதிராக பவுன்சர்களை அதிகம் பயன்படுத்தினார்.

ஷார்ட் பால் மூலம் பேர்ஸ்டோ விக்கெட்டை வீழ்த்திய அவர் விக்கெட் விழுந்த மகிழ்ச்சியில் பேர்ஸ்டோவை நோக்கி வாயில் விரல் வைத்து விக்கெட்டை கொண்டாடி அவரை வழியனுப்பினார். அவர் ஆக்ரோஷமாக நடந்து கொண்டாலும் பேர்ஸ்டோ அதனை கண்டுகொள்ளாமல் பெவிலியன் நோக்கி நடந்தார். ஆண்டர்சனின் செயலுக்கு பதிலடி தரும் விதமாக சிராஜ் இந்த செயலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement