
ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன. அதனால் சமனில் இருக்கும் அந்தத் தொடரின் மூன்றாவது போட்டி டிசம்பர் 14ஆம் தேதி காபா கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதை அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு நங்கூரமாக விளையாடிய உஸ்மான் கவாஜாவை 21 ரன்களில் அவுட்டாக்கிய பும்ரா எதிர்புறம் 9 ரன்கள் எடுத்த நாதன் மெக்ஸ்வீனியையும் காலி செய்தார். அடுத்து வந்த மார்னஸ் லபுஸ்ஷேன் 55 பந்துகள் எதிர்கொண்டு 12 ரன்கள் எடுத்து நங்கூரத்தை போட்டார். அப்போது அவரிடம் முகமது சிராஜ் ஸ்லெட்ஜிங் செய்து விக்கெட்டை எடுக்க முயற்சித்தார்.
அதற்கு ஆஸ்திரேலிய ரசிகர்கள் கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் லபுஸ்ஷேன் அவுட்டாகாமல் நங்கூரமாக பேட்டிங் செய்தார். அந்த சூழ்நிலையில் 33வது ஓவரில் ஸ்டம்ப்பில் இருந்த பெய்ல்ஸ் முகமது சிராஜ் மாற்றி வைத்தார். குறிப்பாக கடந்த வருடம் லபுஸ்ஷேனுக்கு எதிராக இங்கிலாந்தின் ஸ்டுவர்ட் ப்ராட் அப்படி பெய்ல்ஸை மாற்றி வைத்து அடுத்த பந்தில் மேஜிக் போல விக்கெட் எடுத்தார்.
அதைப் பார்த்து விராட் கோலியின் இதற்கு முன் ஒருமுறை அதே போல செய்து இந்தியா விக்கெட் எடுக்க உதவியுள்ளார். அதே போன்ற மேஜிக்கை சிராஜ் செய்தார். ஆனால் அவர் அப்படி செய்து விட்டு சென்ற பின் மார்னஸ் லபுஸ்ஷேன் பெய்ல்ஸை மீண்டும் எடுத்து முன்பு இருந்தது போலவே மாற்றி வைத்தார். தொடர்ந்து சிராஜ் வீசிய பந்துகளில் லபுஸ்ஷேனை அவுட்டாக்க முடியவில்லை.
ஆனால் நித்திஸ் ரெட்டி வீசிய அடுத்த ஓவரில் மார்னஸ் லபுஸ்ஷேன் எட்ஜ் கொடுத்து விராட் கோலியிடம் கேட்ச்சாகி சென்றார். அந்த வகையில் முகமது சிராஜ் விரித்த மைண்ட் கேம் வலையில் லபுஸ்ஷேன் விழுந்தார் என்று சொல்லலாம். தொடர்ந்து நடைபெறும் போட்டியில் அடுத்து வந்த டிராவிஸ் ஹெட் – ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் ஜோடி சேர்ந்து இந்தியாவுக்கு சவாலை கொடுக்கிறார்கள்.
இதையும் படிங்க: உண்மையான்னு தெரியல.. ஆனா 2024 டி20 உ.கோ ஃபைனலில் இந்தியா ஜெய்க்க அவர் தான் காரணம்.. அர்ஷ்தீப் சிங்
அதில் ஹெட் வழக்கம்போல மீண்டும் இந்தியாவை அடித்து அரை சதத்தை கடந்து சவால் கொடுத்து வருகிறார். ஸ்டீவ் ஸ்மித்தும் 46 ரன்கள் கடந்து இந்தியாவுக்கு சவாலை கொடுத்து வருகிறார். அதனால் இந்த பதிவிடும் போது ஆஸ்திரேலியா 162-3 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. எனவே ஆஸ்திரேலியாவை விரைவில் சுருட்ட இந்தியா முயற்சித்து வருகிறது.