கொல்கத்தா பகலிரவு டெஸ்ட் போட்டியில் அம்பயர்களுக்கும் சிக்கல் இருக்கும் – சைமன் டபள் பேட்டி

Simon
- Advertisement -

இந்திய அணி தற்போது வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி வரும் வெள்ளிக்கிழமை 22 ஆம் தேதி பகலிரவு போட்டியாக நடைபெறுகிறது.

Net

- Advertisement -

இந்த பிங்க்பால் டெஸ்ட் குறித்து பல்வேறு சுவாரஸ்யமான விடயங்கள் வெளியாகியிருந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி அம்பயர் சைமன் டபள் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் என்பது இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிக்கு கடினம் கடினமாக இருக்க போவது போன்று அவபயர்களுக்கும் இது சவாலான ஒரு போட்டியாக அமைய உள்ளது.

ஏனெனில் முதன்முதலாக பகலிரவு டெஸ்ட் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்றபோது அந்த ஆட்டத்தில் அம்பயராக செயல்பட்டேன். விளக்கொளியில் பந்து எங்கே செல்கிறது என்று சரியாக கணிக்கமுடியாது. இதனால் அம்பயர்கள் சற்று தடுமாற செய்வார்கள் எனவே பகல் இரவு டெஸ்ட் போட்டிக்கு முறையாக பயிற்சி வகுப்பினை அம்பயர்களும் எடுக்க வேண்டும்.

Umpire

எல்பி மற்றும் கேட்ச் போன்றவை முக்கியமான நேரத்தில் போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடியவை. எனவே ஒரு தவறான முடிவு போட்டியின் முடிவினை கூட மாற்றும் எனவே அம்பயர்களுக்கு இன்னும் கூடுதல் கவனம் தேவை. வீரர்களுக்கு எவ்வாறு பயிற்சி இருக்கிறதோ அதனை போன்று அவர்களும் இந்த போட்டிக்கு முன் தங்களது கவனத்தை முறையாக வைத்துக்கொள்ள வேண்டும்.

Umpire

பகலிரவு டெஸ்ட் போட்டி வீரர்கள் மற்றுமின்றி அம்பயர்களுக்கும் சவாலான விடயம் தான் இருப்பினும் இந்த பகலிரவு ஆட்டத்தின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் நிச்சயம் வலுவான நிலைக்கு மீண்டும் திரும்பும் என்பது எனது கருத்து என்று சைமன் டபள் கூறினார்.

Advertisement