13 வருட அம்பயரிங் கேரியரில் நான் கண்ட 3 மிகச்சிறந்த கிரிக்கெட் இன்டலிஜென்ட்ஸ் – சைமன் டபள் ஓபன் டாக்

Taufel

சர்வதேச கிரிக்கெட்டில் அம்பயரிங் என்பது மிக முக்கியமான பொறுப்பான பணியாகும். ஏனெனில் சில சமயங்களில் அம்பயர் செய்யும் சிறிய தவறுகூட பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதற்கு உதாரணமாக 2019ஆம் ஆண்டு நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டியில் அம்பயர் கொடுத்த தவறான 5 ரன்கள் நியூசிலாந்தின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. அந்த வகையில் அம்பயர்தான் கிரிக்கெட்டின் பொறுப்பான பணியை சுமந்து செல்கிறார் என்று கூறலாம்.

Taufel 1

மேலும் அம்பயர்கள் என்பவர்கள் கிரிக்கெட் வீரர்களையும், அவர்களது செயல்பாடுகளையும் மைதானத்தில் நன்கு உன்னிப்பாக கவனிக்கும் திறன் பெற்றவர்கள் மேலும் வீரர்களின் அணுகுமுறைகளும், செயல்பாட்டையும் கவனித்து சரியான தீர்ப்பை வழங்க வேண்டிய பொறுப்பும் அவர்களிடம் உள்ளது.

அந்த வகையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த அம்பயரான சைமன் டபள் 13 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் அம்பயரிங் பணியை திறம்பட செய்துள்ளார் என்று கூறலாம். 1999-ம் ஆண்டிலிருந்து 2012 ஆம் ஆண்டு வரை அம்பயரிங் செய்தவர். இவர் 74 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 174 ஒருநாள் போட்டிகள் மற்றும் 34 டி20 போட்டிகளுக்கு அம்பயராக பணியாற்றியுள்ளார்.

Simon Taufel

இவர் சாதாரணமான கிரிக்கெட் கிளப் போட்டிகளில் இருந்து சர்வதேச கிரிக்கெட் வரை சிறப்பாக தனது பணியைத் தொடர்ந்து செய்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சிறந்த அம்பயர் விருதை வென்றுள்ளார். 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை பைனல் உட்பட பல முக்கிய போட்டிகளில் இவர் தனது சிறப்பான பணியை செய்துள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது தனியார் உரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ள அவர் கிரிக்கெட் விளையாட்டில் தான் கண்ட சிறந்த மூன்று கிரிக்கெட் அறிவாளிகளை பற்றி பேசியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில் : நான் பார்த்ததிலேயே சிறந்த கிரிக்கெட் மூளைக்காரர் என்றால் தோனிதான். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தபோது அவரது செயல்பாடு மிகவும் கெட்டிக்காரத்தனமாக இருக்கும்.

Warne

மேலும் ஆஸ்திரேலிய அணியின் டேரன் லீமன் மற்றும் வார்னே ஆகியோர் சிறந்த கிரிக்கெட் மூளையை கொண்டவர்கள் நான் பார்த்ததில் இந்த மூன்று பேர் சிறப்பாக கிரிக்கெட்டை கணிக்கக் கூடியவர்கள் மேலும் இதில் தோனி மட்டும் மிக நிதானமாக ரிலாக்ஸாக முடிவுகளை எடுப்பார் என்று அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.