- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தேவையற்ற 2 வேலையை செஞ்சு.. ஆஸியில் விராட் கோலி பெயரை கெடுத்துக்கிட்டாரு.. பின்ச், கேட்டிச் விமர்சனம்

ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. அதன் காரணமாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கும் தகுதி பெற முடியாமல் இந்தியா வெளியேறியது. முன்னதாக அந்தத் தொடர் துவங்கும் போது விராட் கோலியை கிங் என்று ஆஸ்திரேலிய பத்திரிகைகள் வரவேற்றன. அதற்கு தகுந்தார் போல் முதல் போட்டியில் சதத்தை அடித்த அவர் இந்தியாவின் வெற்றிக்கும் பங்காற்றினார்.

ஆனால் அதற்கடுத்த போட்டிகளில் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் தம்முடைய விக்கெட்டை பரிசளித்த விராட் கோலி இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தார். அதை விட நான்காவது போட்டியில் அறிமுகமான 19 வயது இளம் வீரர் சாம் கோன்ஸ்டஸ் பும்ராவை அதிரடியாக எதிர்கொண்டு இந்தியாவுக்கு பின்னடைவை கொடுத்தார். அதனால் அவருடைய தோளில் விராட் கோலி இடித்து தள்ளியதற்கு ஆஸ்திரேலிய ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

- Advertisement -

ஆஸியுடன் மோதல்:

ஒரு ஆஸ்திரேலிய பத்திரிக்கை விராட் கோலியை கோமாளி என்று முகப்பு பக்கத்தில் சித்தரித்து விமர்சித்தது. அப்போதிலிருந்து ஆஸ்திரேலிய ரசிகர்கள் தொடர்ந்து அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதனால் கோபமடைந்த விராட் கோலி கடைசி போட்டியின் கடைசி நாளில் “ஸ்டீவ் ஸ்மித்தை போல நான் ஒன்றும் உப்பு காகிதத்தை வைத்து ஏமாற்றாமல் எங்கள் நாட்டுக்காக நேருக்கு நேராக தோளில் தான் இடித்து மோதினேன்” என்று ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு செய்கையால் பதிலடி கொடுத்தார்.

இந்நிலையில் விராட் கோலியின் அந்த 2 செய்கைகள் ஏற்புடையதல்ல என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி தோளில் எடுத்ததை போன்ற தருணத்தை நான் களத்தில் பார்த்ததில்லை. பின்னர் உப்பு காகிதம் பற்றி தேவை என்று செய்து காட்டினார்”

- Advertisement -

கேடிச் விமர்சனம்:

“மொத்தத்தில் அவர் தமக்குள் தமக்குத்தானே நெருப்பை உருவாக்க முயற்சித்தார். ஆனால் அது உருவாகவில்லை” என்று கூறினார். அந்த 2 செய்கைகளால் ஆஸ்திரேலியாவில் எடுத்திருந்த பெயரை விராட் கோலி தமக்குத்தாமே அழித்துக் கொண்டதாக முன்னாள் வீரர் சைமன் கேட்டிச் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அந்த செயல்கள் தேவையில்லை. குறிப்பாக உப்பு காகிதம் மிகவும் பழைய செய்தி”

இதையும் படிங்க: கம்பீரின் கோரிக்கையை ஏற்று முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நிதீஷ் ரெட்டி – விவரம் இதோ

“எனவே இந்த சுற்றுப்பயணத்தில் விராட் கோலி களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திக் கொண்டார் என்று நினைக்கிறேன்” எனக் கூறினார். அப்படி ஆஸ்திரேலியாவில் விமர்சனங்களை சந்தித்துள்ள விராட் கோலி சுமாராக விளையாடியதால் இந்தியாவிலும் விமர்சனங்களை சந்தித்து வருகிறார். அதனால் அடுத்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவர் விளையாடுவாரா என்பது சந்தேகமாக உள்ளது.

- Advertisement -