தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 30 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. நவம்பர் 14ஆம் தேதி துவங்கிய அப்போட்டியில் முதலில் விளையாடிய தென்னாபிரிக்கா 159 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஐடன் மார்க்ரம் 31 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகள் எடுத்தார்.
அடுத்ததாக விளையாடிய இந்தியா 189 ரன்கள் அடித்து 30 ரன்களை முன்னிலையாகவும் பெற்றது. அதிகபட்சமாக கே.எல் ராகுல் 39, வாஷிங்டன் சுந்தர் 29, ரிசப் பண்ட் 27, ரவீந்திர ஜடேஜா 27 ரன்கள் எடுத்தார்கள். தென் ஆப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக சைமன் ஹார்மர் 4, மார்கோ யான்சென் 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதன் பின் விளையாடிய தெனாப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்ஸில் 153 ரன்கள் குவித்தது.
ஆட்டநாயகன் சைமன்:
அதிகபட்சமாக கேப்டன் பவுமா 55*, கோர்பின் போஸ்க் 25 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணிக்கு அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 4, முகமது சிராஜ் 2, குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகள் எடுத்தார்கள். இறுதியில் 124 ரன்களை துரத்திய இந்தியாவை 93 ரன்களுக்கு சுருட்டி வீசிய தென்னாப்பிரிக்கா 15 வருடங்கள் கழித்து இந்திய மண்ணில் வெற்றி பெற்று 1 – 0* (2) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 31 ரன்கள் எடுத்த நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக சைமன் ஹார்மர் 4 விக்கெட்டுகள் எடுத்தார். இந்த வெற்றிக்கு மொத்தம் 8 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய சைமன் ஆட்டநாயகன் விருது வென்றார். இந்நிலையில் 2015 இந்திய டெஸ்ட் தொடரில் 10 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை சந்தித்ததாக அவர் கூறியுள்ளார்.
2015இல் விட்ட வெற்றி:
ஆனால் அப்போது விட்ட வெற்றியை இப்போது பிடித்துள்ளது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இன்று பந்து பழையதாகும் போது பிட்ச் ஃபிளாட்டாக மாறியதாக உணர்ந்தேன். இதற்கு முன்பும் இந்தியாவில் நான் இருந்தேன். அது கருப்பு இடமாக இருந்தது. தற்போது இங்கே வந்து 8 விக்கெட்டுகள் எடுத்து வெற்றிக்கு மீண்டும் போராடுவது எங்களுடைய தன்னம்பிக்கையைக் காட்டுகிறது”
“நான் சாதனை மனிதன் கிடையாது. வெற்றி மனிதன். இந்த வெற்றியால் மகிழ்ச்சியடைகிறேன். இத்தொடரில் இன்னும் ஒரு போட்டி இருப்பதால் நாங்கள் மகிழ்ச்சியுடன் விளையாட உள்ளோம். நான் நன்றாக பந்து வீச வேண்டும் என்பது எனக்குத் தெரியும். ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தால் வெற்றி பெற முடியும் என்பது எங்களுக்குத் தெரியும். முடிந்தளவு பந்துகளை நான் சரியான இடத்தில் போட முயற்சித்தேன்”
இதையும் படிங்க: இதை செய்தால் வெற்றி கிடைக்கும் என்பதை நம்பி தான் விளையாடினோம் – தெம்பா பவுமா மகிழ்ச்சி
“அதில் சில பந்துகள் தவறிய போதிலும் ஜுரேல் விக்கெட் அதிர்ஷ்டத்தால் கிடைத்தது. வெற்றிக்கு பின்னே நிற்பது மகிழ்ச்சியளிக்கிறது. சுப்மன் கில் மீண்டும் பேட்டிங் செய்ய வர மாட்டார் என்பது எனக்கு தெரியாது. என்னுடைய விக்கெட்டுகளை காட்டிலும் வெற்றி மகிழ்ச்சி கொடுக்கிறது. எங்கள் பவுலர்கள் நன்றாக பந்து வீசினார்கள்” என்று கூறினார்.



