103 ரன்ஸ்.. சச்சின், கங்குலியோட முடிஞ்சுடிச்சு.. இந்தியாவின் பொய்யான முகத்தை விமர்சித்த சைமன் டௌல்

Simon Doull
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 46க்கு ஆல் அவுட்டான இந்தியா சொந்த மண்ணில் 36 வருடங்கள் கழித்து தோல்வியை சந்தித்தது. அந்த நிலையில் அக்டோபர் 24ஆம் தேதி புனே நகரில் இரண்டாவது போட்டி துவங்கியது. அதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 259 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 65, கான்வே 76 ரன்கள் எடுத்தனர்.

இந்தியாவுக்கு அதிகபட்சமாக தமிழக வீரர்கள் அஸ்வின் 3, சுந்தர் 7 விக்கெட்டுகள் எடுத்தனர். பின்னர் விளையாடிய இந்தியா அதை விட மோசமாக பேட்டிங் செய்து வெறும் 156 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. குறிப்பாக சுழலுக்கு சாதகமாக மாறிய ஆடுகளத்தில் பொறுப்புடன் விளையாடாத ரோஹித் சர்மா, விராட் கோலி 5 ரன்கள் கூட தாண்டவில்லை.

- Advertisement -

இந்தியா திணறல்:

ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், கில் ஆகியோரும் பெரிய ரன்கள் எடுக்காத நிலையில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 38 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக மிட்சேல் சான்ட்னர் 7 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத் தொடர்ந்து 103 ரன்கள் முன்னிலையுடன் நியூசிலாந்து பேட்டிங் செய்து வருகிறது.

முன்னதாக சமீப காலங்களாகவே சுழலுக்கு சாதகமான பிட்ச்சில் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறலாக பேட்டிங் செய்து தோல்விக்கு காரணமாகி வருகிறார்கள். குறிப்பாக கடந்த வருடம் இந்தூரில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்திக்கவும் சமீபத்தில் இலங்கைக்கு எதிராக கொழும்புவில் ஒருநாள் தொடரில் 27 வருடங்கள் கழித்து இந்தியா தோல்வியை சந்திக்கவும் பேட்ஸ்மேன்கள் முக்கிய காரணமானவர்கள்.

- Advertisement -

உண்மை முகம்:

இந்நிலையில் இந்திய பேட்ஸ்மேன்ன்கள் என்றாலே ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொள்ள கூடியவர்கள் என்பது பேச்சு வழக்கு என்று முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டௌல் கூறியுள்ளார். ஆனால் அது சச்சின், கங்குலி காலத்துடன் முடிந்து விட்டதாக தெரிவிக்கும் அவர் இப்போதைய இந்திய பேட்ஸ்மேன்களின் உண்மை நிலையை விமர்சித்தது பின்வருமாறு. “இந்த நவீன இந்திய வீரர்கள் உலகின் மற்றவர்களை காட்டிலும் சுழல் பந்துகளை நன்றாக எதிர்கொள்ளக்கூடியவர்கள் என்ற கண்ணோட்டம் இருக்கிறது”

இதையும் படிங்க: 156க்கு சுருட்டிய சான்ட்னர்.. 2001க்குப்பின் இந்தியா மோசமான சாதனை.. 46 அவுட்டை விட மோசம் என ஸ்மித் விளாசல்

“உண்மையில் அவர்கள் அப்படி கிடையாது. அவர்களும் உலகின் மற்ற பேட்ஸ்மேன்களை போன்றவர்களே. கங்குலி, கம்பீர், லக்ஷ்மன், டிராவிட் ஆகியோரது காலத்துடன் அது முடிந்தது. ஸ்பின்னர்களுக்கு எதிராக சச்சின் சிறந்தவர். அந்த சகாப்தத்துடன் அது முடிந்தது. உண்மையில் இந்திய ஸ்பின்னர்கள் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு எதிராக தரமாக செயல்படுகிறார்கள். ஆனால் அவர்களது பேட்ஸ்மேன்கள் அவ்வளவு தரம் இல்லை. இதற்கு காரணம் ஐபிஎல் தொடரில் சுழலுக்கு சாதகமான பிட்ச்சை பார்த்தால் உடனே அவர்கள் புகார் செய்கின்றனர்” என்று கூறினார்.

Advertisement