ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்காக இளம் வீரர் திக்வேஷ் சிங் ரதி நன்றாக செயல்பட்டு வருகிறார். இருப்பினும் அவர் விக்கெட் எடுக்கும் போது கொண்டாடுவது பிசிசிஐ விதிமுறைகளுக்கு எதிரானதாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் அவர் பிரியான்ஸ் ஆர்யா விக்கெட்டை எடுத்தார். அப்போது பெவிலியன் நோக்கி சென்று கொண்டிருந்த அவரிடம் ஓடிய திக்வேஷ் அவர் மேலே உரசிக்கொண்டு கையில் ஏதோ எழுதி வெளியே போ வகையில் விக்கெட்டை கொண்டாடினார்.
அதற்காக முதல் எச்சரிக்கையாக 25% சம்பளம் அபராதம் மற்றும் ஒரு கருப்பு புள்ளியை பிசிசிஐ தண்டனையாக வழங்கியது. அதனால் அமைதியாவார் என்று எதிர்பார்க்கப்பட்ட திக்வேஷ் மீண்டும் மும்பைக்கு எதிரான போட்டியில் விக்கெட்டை எடுத்த போது அவ்வாறு கொண்டாடினார். அந்தப் போட்டியில் பேட்ஸ்மேன் அருகே ஓடாமல் இருந்த இடத்திலேயே அவர் கொண்டாடியதால் தண்டனை கிடைக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது.
அடுத்தடுத்த தண்டனை:
ஆனால் அந்தப் போட்டியில் 50% போட்டி சம்பளத்தை அபராதமாக விதித்த பிசிசிஐ 2 கருப்பு புள்ளிகளையும் பரிசாகக் கொடுத்தது. அதன் காரணமாக இனிமேல் திக்வேஷ் விக்கெட் எடுத்த பின் அமைதியாக கொண்டாடுவார் என்று நம்பப்பட்டது. ஆனால் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் தம்முடைய ரோல் மாடலான சுனில் நரேன் விக்கெட்டை எடுத்த அவர் மீண்டும் அப்படியே கொண்டாடினார்.
இருப்பினும் இம்முறை கொஞ்சம் வித்தியாசமாக அவர் தரையில் எழுதி கொண்டாடினார். 3வது முறையாக அப்படி கொண்டாடியதால் அவருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் பிசிசிஐ இம்முறை அவர் மேல் கருணைக் காட்டி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தவறு என்ன:
இந்நிலையில் கடந்த காலங்களில் அம்பயர்களுடன் தோனி களத்திற்கே சென்று சண்டை போட்டது, விராட் கோலி தொப்பியை வீசி எரிந்து வெறித்தனமாக விக்கெட்டை கொண்டாடியது போன்ற விதிமுறை மீறல்களை செய்துள்ளனர். அப்போது அவர்களுக்கு எந்தை தண்டனையும் விதிக்காத பிசிசிஐ திக்வேஷ்க்கு மட்டும் அடுத்தடுத்த தண்டனைகள் கொடுத்தது சரியல்ல என்று முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டௌல் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
இதையும் படிங்க: பெரிய பெயரை வெச்சுகிட்டு சுயநலமா இல்லாம நாட்டுக்காக அவங்களுக்காக ரிட்டையராகுங்க.. மொய்ன் அலி
“அணிகள் ஓவர்ரேட் விதிமுறையை தாண்டுவதற்காக அபராதம் கட்டுவதை நான் விரும்பவில்லை. அதே போல ஒருவர் வித்தியாசமாக கொண்டாடுவதில் தவறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இதை விட சீனியர் இந்திய வீரர்கள் உங்களது முகத்துக்கு முன் மோசமாக கொண்டாடியுள்ளனர் ஆனால் அவர்களுக்கு அபராதம் விதிக்கவில்லை. அப்படிப்பட்ட நிலையில் இந்த இளம் பையன் நோட்புக் போல கொண்டாடினால் என்ன தவறு?” என்று கூறினார்.



