சி.எஸ்.கே அணி ரெய்னாவை புறக்கணிக்க தோனி கைவிட்டது தான் காரணம் – உண்மையை உடைத்த பிரபலம்

Doull
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில் அதில் 204 வீரர்களை வாங்கியுள்ள 10 அணிகள் அதற்காக 551 கோடிகள் செலவு செய்துள்ளன. இந்த ஏலத்தில் அதிக பட்சமாக இந்தியாவைச் சேர்ந்த இளம் விக்கெட் கீப்பர் இஷான் கிசான் 15.25 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகி சாதனை படைத்துள்ளார்.

Gowtham-1

- Advertisement -

இந்த ஏலத்தில் வழக்கம் போலவே வெளிநாட்டு வீரர்களுக்கு அதிக மவுசு காணப்பட்டது. அந்த வகையில் இங்கிலாந்தைச் சேர்ந்த நட்சத்திர ஆல்ரவுண்டர் லியம் லிவிங்ஸ்டன் 11.50 கோடிகளுக்கு பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன் வாயிலாக இந்த ஏலத்தில் அதிக தொகைக்கு ஒப்பந்தமான வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

ஏலம் போகாத ரெய்னா:
அதேபோல் இந்த ஏலத்தில் ஷ்ரேயஸ் ஐயர், டேவிட் வார்னர், நிக்கோலஸ் பூரன் போன்ற வீரர்கள் நல்ல விலைக்கு ஒப்பந்தமானார்கள். இருப்பினும் 2021 டி20 உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியாவின் கேப்டன் ஆரோன் பின்ச், ஸ்டீவ் ஸ்மித் போன்ற வீரர்கள் இந்த ஏலத்தில் விலை போகாதது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.

Raina

அதை விட இந்தியாவின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னாவை இந்த ஏலத்தில் சென்னை உட்பட எந்த அணியும் வாங்க முன்வராதது ரசிகர்களை மிகப்பெரிய அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஏனெனில் கடந்த 2008 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த அவர் எதிரணி பந்து வீச்சாளர்களை பந்தாடி பல சாதனைகளை படைத்ததால் ரசிகர்கள் அவரை “மிஸ்டர் ஐபிஎல்” என்று அழைத்து வந்தார்கள். இருப்பினும் கடந்த சில வருடங்களாக ஐபிஎல் தொடரில் ரன்களை குவிக்க தடுமாறி வரும் அவர் மோசமான பார்மில் இருப்பதால் அவரை எந்த அணியும் வாங்கவில்லை என கருதப்படுகிறது.

- Advertisement -

2020இல் நடந்தது மறந்துட்டீங்களா:
இருப்பினும் 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணியில் நீண்ட காலமாக இடம் பிடித்திருந்த சுரேஷ் ரெய்னா வரலாற்றில் அந்த அணியின் பல சரித்திர வெற்றிகளில் அளப்பரிய பங்காற்றி உள்ளார். குறைந்தபட்சம் அதற்காகவாவது அவரை வாங்கி பெஞ்சில் அமர வைத்திருக்கலாமே என சென்னை அணி மீது ரசிகர்கள் மிகுந்த கோபத்தில் உள்ளார்கள்.

Simon Doull

இந்நிலையில் ஐபிஎல் 2022 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் சுரேஷ் ரெய்னாவை ஏன் வாங்கவில்லை என்ற உண்மையான காரணத்தை நியூசிலாந்தின் முன்னாள் வீரர் சைமன் டௌல் கூறியுள்ளார். இதுபற்றி பிரபல கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இதில் 2 – 3 பகுதிகள் உள்ளது. குறிப்பாக ஐக்கிய அரபு நாடுகளில் நடந்த ஐபிஎல் தொடரில் அவர் சென்னை அணியில் தனது விசுவாசத்தை இழந்தார். அதற்கான காரணத்தைப் பற்றி விரிவாக பேச தேவையில்லை. எனவே அந்தத் தருணத்தில் அவர் தனது விசுவாசத்தை இழந்தார் என்பதை யூகிக்க பல காரணங்கள் உள்ளது.

- Advertisement -

அவை அனைத்தையும் விட அந்த தருணத்தால் எம்எஸ் தோனியிடம் அவர் தனது விசுவாசத்தை இழந்தார். அதுபோன்ற ஒரு செயலை நீங்கள் செய்த பின்னர் பெரும்பாலும் உங்களை மீண்டும் மனதார யாரும் வரவேற்க மாட்டார்கள். அதன்படியே தோனியும் அவர்மீது பெரும் வருத்தத்தில் இருந்தார். அதனால் தான் தோனி ரெய்னாவை தக்கவைக்க ஆர்வம் காட்டவில்லை. அத்துடன் அவர் தற்போது முழு உடல் தகுதியுடன் இல்லாமல் இருப்பதுடன் ஷார்ட் பால் பந்துகளுக்கு பயப்படுகிறார்” என உண்மையைப் போட்டு உடைத்துள்ளார்.

Raina

கைவிட்ட ரெய்னா:
கடந்த 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் திடீரென இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு நாடுகளுக்கு மாற்றப்பட்டது. அப்போது அந்த தொடரில் பங்கேற்பதற்காக சென்னை அணியுடன் துபாய் சென்ற சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பாகவே தனது குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு மோசமான பிரச்சனை காரணமாக திடீரென பாதியில் இந்தியா திரும்பினார்.

- Advertisement -

சென்னை அணிக்கு சுரேஷ் ரெய்னா எந்த அளவுக்கு ஒரு முதுகெலும்பான வீரர் என யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அப்படிப்பட்ட நேரத்தில் ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு முன்பாக சென்னை அணியை கைவிட்டு விட்டு திடீரென அவர் பாதியில் விலகியதால் அந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் வரலாற்றில் இல்லாத அளவுக்கு அடுத்தடுத்த படுதோல்வியை சந்தித்தது. இறுதியில் அந்த அடுத்தடுத்த தோல்விகளால் வரலாற்றிலேயே முதல் முறையாக பிளே ஆப் சுற்றுக்கு கூட செல்ல முடியாமல் பெருத்த அவமானத்தை சந்தித்த அந்த அணி புள்ளி பட்டியலில் முதல் முறையாக 7வது இடத்தை பிடித்து மோசமான இடத்துக்கு தள்ளப்பட்டது.

raina

துபாயில் சென்னை மோசமாக தடுமாறிக் கொண்டிருந்த அந்த நேரத்தில் தனது பிரச்சனையை முடித்து விட்டு சுற்றுலா பயணங்களில் சுரேஷ் ரெய்னா ஈடுபட்டது சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த நேரத்தில் சென்னை அணியுடன் பாதியிலாவது சுரேஷ் ரெய்னா இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி வரை அவர் அந்த தொடரை புறக்கணித்து விட்டார். அதனால் ஏற்கனவே செம கடுப்பில் இருந்த சென்னை அணி நிர்வாகம் சமீப காலங்களாக அவர் மோசமான பார்மில் இருந்து வருவதை காரணம் காட்டி தற்போது அவரை ஏலத்தில் எடுக்கவில்லை என சைமன் டௌல் உண்மையான காரணத்தை அம்பலப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க : லேடிஸ் அன்ட் ஜென்ட்டில்மென்ஸ் இவர்தான் எங்க அணியோட கேப்டன் – கொல்கத்தா நிர்வாகம் அறிவிப்பு

இருப்பினும் எம்எஸ் தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த வருடம் ஓய்வு பெற்றபோது 35 வயது மட்டுமே நிரம்பி இருந்த சுரேஷ் ரெய்னா அவர் மீது இருந்த பாசத்தாலும் அன்பாலும் விசுவாசத்தாலும் அதே நாளன்று தாமும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அந்த விசுவாசத்திற்காக சென்னை கேப்டன் தோனி அவரை வாங்கி இருக்கலாமே என்று சைமன் டௌல் கூறும் இந்த கருத்துக்கு ரசிகர்கள் பதிலடி கொடுக்கிறார்கள்.

Advertisement