அவங்க ஆடுனதை பாத்தா நாங்க 180 ரன்ஸ் அடிச்சிருந்தா கூட பத்தியிருக்காது போல – சிக்கந்தர் ராசா பேட்டி

Raza
- Advertisement -

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகித்திருந்த வேளையில் நேற்று இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே இந்திய அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் குவித்தது. ஜிம்பாப்வே அணி சார்பாக அதிகபட்சமாக கேப்டன் சிக்கந்தர் ராசா 46 ரன்களை அடித்தார்.

- Advertisement -

இந்திய அணி சார்பாக கலீல் அகமது 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் 153 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது துவக்கத்திலிருந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் 15.2 ஓவர்களில் 156 ரன்கள் குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 93 ரன்களையும், சுப்மன் கில் 58 ரன்களையும் குவித்தனர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய சிக்கந்தர் ராசா கூறுகையில் : பந்து பேட்டுக்கு நன்றாகவே வந்தது. 160 ரன்கள் வரை நாங்கள் அடித்தால் சரியாக இருக்கும் என்று நினைத்தோம்.

- Advertisement -

ஆனால் இந்திய அணி விளையாடிய விதத்தை பார்க்கும் போது நாங்கள் 180 ரன்கள் அடித்திருந்தால் கூட அது வெற்றிக்கு உதவி இருக்காது என்று தோன்றுகிறது. அந்த அளவிற்கு அற்புதமான ஆட்டத்தை இந்திய அணி வீரர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். நாங்கள் ஒவ்வொரு போட்டியிலும் நிறைய விடயங்களை கற்று வருகிறோம். இந்த போட்டியில் கடைசி ஐந்து ஓவர்களின் போது இன்னும் 8 முதல் 10 ரன்கள் வரை கூடுதலாக அடித்திருந்தால் எங்களால் ஒரு போட்டியை அளித்திருக்க முடியும்.

இதையும் படிங்க : பழி வாங்கிட்டோம்.. ஜூலை 6இல் கொக்கரித்த பாகிஸ்தான்.. ஜூலை 13இல் உண்மையாக பழி வாங்கிய இந்தியா

ஆனால் இந்திய அணியின் பந்துவீச்சும் சிறப்பாக இருந்தது. இந்த தொடரின் எஞ்சியுள்ள ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்று மூன்றுக்கு இரண்டு (3-2) என்ற கணக்கில் இந்த தொடரை முடிக்க விரும்புகிறோம் என சிக்கந்தர் ராசா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement